உ.பி.யில் தடம்புரண்ட ரயில் பெட்டியில் இருந்து 2 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
கான்பூர்: இன்று காலை விபத்துக்குள்ளான இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் தடம் புரண்ட பெட்டியில் இருந்து 2 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் தேஹத் மாவட்டத்தில் உள்ள புக்ரயன் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் இன்று காலை தடம்புரண்டன. இந்த விபத்தில் 100 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் தடம்புரண்ட பெட்டிகளில் ஒன்றான எஸ்3-ல் இருந்து 6 மற்றும் 7 வயது சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களின் அருகில் பெண் ஒருவரின் சடலம் இருந்தது. அந்த பெண் அவர்களின் தாயாக இருக்கலாம் என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். மற்றொரு பெட்டியில் இரண்டு சிறுமிகள் சிக்கியுள்ளனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மக்கள் அதிக அளவில் கூடியிருப்பதால் மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications