வார்டன்னாலே அடிப்போம்.. ’கராச்சி’னு பேர் வச்சது தப்பா? இந்தியரின் பேக்கரியை சூறையாடிய கும்பல்!
ஹைதரபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் ஹைதராபாத்தில் புகழ்பெற்ற கராச்சி பேக்கரியை தாக்கி இருக்கின்றனர் தேசிய கொடியுடன் வந்த ஒரு கும்பல். 1953ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பேக்கரியை தேசியக் கொடியோடு வந்த சிலர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாகவே மோதல் நீடித்து வரும் நிலையில் காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நடத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் விரிசலை அதிகப்படுத்தியது. தொடர்ந்து பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா முப்படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
தீவிரவாதிகள் பயிற்சி பெற்ற மையங்கள் உள்ளிட்டவை குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது இந்தியா போர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி பாகிஸ்தான் சில நாட்களாக எல்லையில் அத்துமீறியது.

இதை அடுத்து அந்த தாக்குதலை முறியடித்ததோடு பாகிஸ்தானுக்கு உள்ளே இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தான் கராச்சி என்ற பெயரைக் கொண்ட பிரபல பேக்கரி ஒன்று சர்ச்சையில் சிக்கியது. சுதந்திரத்தின் போது இந்தியா பாகிஸ்தான் பிரிவினை நடந்தது.
அப்போது கராச்சியிலிருந்து இந்தியாவுக்கு வந்த கான்சாந்த் ரம்னாணியா என்பவர் 1953 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் கராச்சி பேக்கரியை தொடங்கினார். தற்போது அவரது மகன்களான ராஜேஷ் ரம்னாணியா, ஹரிஷ் ரம்னாணியா ஆகியோர் அந்த பேக்கரியை நடத்தி வருகின்றனர். மிகவும் பழமையான இந்த பேக்கரி தற்போது ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை வரும்போதெல்லாம் கராச்சி பேக்கரி பேசுபொருளாவது வழக்கம். தற்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சிலர் ஹைதராபாத் கராச்சி பேக்கரிக்கு சென்று அந்த கடையின் பெயரை மாற்ற வேண்டும் என கூறினர். மேலும் பேக்கரியின் மீது பெயர் பலகை உள்ளிட்டவற்றை கருப்பு துணி கொண்டு மூடினர்.
இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர்களான ராஜேஷும் ஹரியும், 1953 ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத்தில் எங்கள் கடைகள் செயல்பட்டு வருகிறது. கராச்சி பேக்கரி என்பது பாகிஸ்தானின் பிராண்ட் இல்லை. இது முழுக்க முழுக்க இந்தியாவின் பிராண்ட். எங்களது தந்தை கராச்சியிலிருந்து வந்ததால் இந்த பெயரை வைத்தார். இந்த பேக்கரி தான் எங்கள் அடையாளம்" எனக் கூறியிருந்தார்.
Karachi Bakery in Hyderabad is being vandalised — but for the record, the owners are Rajesh Ramnani and Harish Ramnani! Wish this anger was shown at the border instead. #IndiaPakistanConflict pic.twitter.com/tKDGNVvmi8
— Salman Nizami (@SalmanNizami_) May 11, 2025
இந்த நிலையில் திடீரென கராச்சி பேக்கரிக்கு வந்த சிலர் தேசிய கொடியோடு அந்த கடையின் பெயர் பலகை உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் அவர்களை தடுத்த நிறுத்த முயன்றும் அவர்கள் கண்டுகொள்ளாமல் கடையின் பெயர் பலகை உள்ளிட்ட அவற்றை அடித்து நொறுக்கினர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications