காஷ்மீரை இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல நடத்தக் கூடாது: கரண்சிங்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்..இருப்பினும் பிற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரை நடத்தக் கூடாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் மகாராஜா ஹரிசிங்கின் மகன் கரண்சிங். மகாராஜா ஹரிசிங்தான் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைத்தவர். அதைத் தொடர்ந்துதான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370வது அரசியல் சாசனப் பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்த பிரிவின்படி ஜம்மு காஷ்மீரின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் கரண்சிங். தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் கரண்சிங், 370வது பிரிவு நீக்கம் தொடர்பான சர்ச்சை குறித்து கூறியுள்ளதாவது:
அரசியல் சாசனப் பிரிவு 370வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் கவலை அளிக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சிக்கலாக்கிவிடக் கூடாது. இந்த விவகாரத்தை கவனமாகத்தான் கையாள வேண்டும்.
பாகிஸ்தான் ஆதரவு பழங்குடிகளின் படையெடுப்பைத் தொடர்ந்துதான் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் என் தந்தை மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார். அதேபோல் பிற சமஸ்தானங்களும் கூட இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்தன.
அதே நேரத்தில் பிற சமஸ்தானங்கள் மாநிலங்களாக இணைந்தது போல் இல்லாமல் ஜம்மு காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 1957ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சாசனத்தில் நான் தான் கையெழுத்திட்டேன். அது இன்னமும் நடைமுறையில் இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது உறுதியான ஒன்றுதான். அதே நேரத்தில் பிற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரை நடத்தலாம் என்பதும் அர்த்தம் அல்ல.
உலகின் பல பகுதிகளில் இப்படி சிறப்பு அந்தஸ்து பெற்ற பிரதேசங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஹாங்காங் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பினும் அதற்கென சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கரண்சிங் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications