சில்மிஷம் செய்த 2 ஆண்களின் மூக்கை உடைத்து, 'அந்த' இடத்தில் உதைத்த 'சூப்பர்' சிறுமி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தன்னை கிண்டல் செய்து சில்மிஷம் செய்த இரண்டு ஆண்களின் மூக்கை உடைத்து முகத்தை பெயர்த்துள்ள 16 வயது சிறுமியை பலரும் பாராட்டியுள்ளனர்.

மேற்கு வாங்க மாநிலம் கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் உள்ளது மதியாம்கிராம். பாலியல் சில்மிஷம், பலாத்காரங்களுக்கு பெயர் போன அந்த இடத்தில் வசிக்கும் பெண்கள் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி மாலை நேரத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது வழக்கமாக பெண்களை கிண்டல் செய்வதும், அவர்களிடம் சில்மிஷம் செய்வதையுமே வேலையாக வைத்துள்ள 5 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்த 2 பேர் சிறுமியை பிடித்து இழுக்க முயன்றுள்ளனர்.

Karate girl kicks her way out of molesters’ clutches

சிறுமி அவர்கள் இருவரின் முகத்திலும் ஓங்கிக் குத்தி அவர்களின் மூக்குகளை உடைத்தார். மேலும் அவர்களின் ஆணுறுப்பு பகுதியில் ஓங்கி எத்தினார். இதை சற்றும் எதிர்பாராத அந்த 2 பேரும் வலியால் அலறிக் கொண்டே அங்கிருந்து தப்பியோடினர்.

இந்நிலையில் இது குறித்து சிறுமி கூறுகையில்,

எங்கள் பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்னையும் யாராவது ஏதாவது செய்யக்கூடும் என்று அஞ்சினேன். இதனால் கடந்த ஓராண்டாக கராத்தே கற்றேன். இந்நிலையில் அந்த 2 பேர் என்னை பிடிக்க முயன்றனர். இதை பார்த்த நான் அவர்களின் முகத்தை பெயர்த்தேன், அந்த இடத்தில் எத்தினேன். அவர்கள் ஏற்கனவே என்னை கிண்டல் செய்து வந்தனர். அவர்கள் மீது போலீசில் புகார் அளித்தும் பலனில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+