கர்நாடகா தேர்தல்: ஜனநாயக திருவிழாவை கொண்டாடுங்கள்.. மோடி, அமித்ஷா, ராகுல் அழைப்பு
கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் எல்லா மக்களும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை கொண்டாட வேண்டும் என்று கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் எல்லா மக்களும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை கொண்டாட வேண்டும் என்று கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வரை 10.45 சதவிகித ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது.
|
அமித் ஷா டிவிட்
கர்நாடக தேர்தல் பற்றி பாஜக தலைவர் அமித் ஷா தனது டிவிட்டில் ''ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதுதான் மக்களின் குரல். மறக்காமல் நவ கர்நாடகாவிற்காக வாக்களியுங்கள். சரியான வேட்பாளருக்கு வாக்களித்து மக்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். எல்லோரும் மறக்காமல் வாக்களிக்க வேண்டும்'' என்றுள்ளார்.
|
ராகுல் காந்தி டிவிட்
அதேபோல் கர்நாடக தேர்தல் பற்றி ராகுல் காந்தி கன்னடத்தில் டிவிட் செய்துள்ளார். அதில் ''என் இளம் முதல் தலைமுறை வாக்காள நண்பர்களே வாக்களிக்க வாருங்கள். வாக்களிப்பது ஜனநாயகத்தின் அடையாளம். கர்நாடகாவில் உள்ள இளைஞர்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவில் கன்னட மக்கள் கொண்டாட வேண்டும்.'' என்றுள்ளார்.
|
மோடி
அதேபோல் கர்நாடக தேர்தல் பற்றி பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். அதில் ''கர்நாடகாவில் உள்ள எல்லோரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். சகோதர, சகோதரிகள் எல்லோரும் வந்து வாக்களியுங்கள். எல்லோரும் வாக்களித்து தேர்தல் என்னும் ஜனநாயக திருவிழாவை கொண்டாட வேண்டும்.'' என்றுள்ளார்.
|
சித்தராமையா டிவிட்
அதேபோல் கர்நாடக தேர்தல் பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா டிவிட் செய்துள்ளார். அதில் ''கர்நாடகாவில் தேர்தல் நடப்பதால் எல்லா மக்களும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். இந்த ஜனநாயக திருவிழாவை எல்லோரும் கொண்டாட வேண்டும்'' என்றுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications