கர்நாடக மாநில அதிமுக பொருளாளர் ராஜேந்திரன் வீடு, நிறுவனங்கள் மீது கல்வீச்சு !
பெங்களூரு: கர்நாடக மாநில அதிமுக பொருளாளர் ராஜேந்திரனின் வீடு, வணிக வளாகம் மற்றும் நிறுவனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. தமிழர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், 30-க்கும் மேற்பட்ட லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பதட்டம் நிலவுகிறது.
இந்நிலையில், பெங்களூரு குமாரசுவாமி லே அவுட் பகுதியில் உள்ள கர்நாடக மாநில அதிமுக பொருளாளர் ராஜேந்திரனின் வீடு, வணிக வளாகம், நிறுவனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அவரின் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications