For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பந்த்: மாலை விமானத்திற்காக அதிகாலையிலேயே பெங்களூர் ஏர்போர்ட்டில் குவிந்த பயணிகள் #TNNeedsKaveri

Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது.

பெங்களூரில் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை. தேவனஹள்ளியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இயக்கப்படும் டாக்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

airport

இதனால் பகல்வேளை, மாலை வேளைகளில் கிளம்பும் விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணிகளால் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள ஏர்போர்ட்டை அடைய முடியாது.

இதை கருத்தில் கொண்டு, மதியம், மாலை வேளை விமானத்தில் பயணிப்போர் கூட காலை 6 மணிக்கு முன்பே ஏர்போர்ட் வந்தனர். இதனால் பஸ் நிலையம் போல ஏர்போர்ட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தரையில் உட்கார்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் பரிதாபமாக காட்சியளித்தனர் அவர்கள்.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது.

இதனால் பகல்வேளை, மாலை வேளைகளில் கிளம்பும் விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணிகளால் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள ஏர்போர்ட்டை அடைய முடியாது.

இதை கருத்தில் கொண்டு, மதியம், மாலை வேளை விமானத்தில் பயணிப்போர் கூட காலை 6 மணிக்கு முன்பே ஏர்போர்ட் வந்தனர். இதனால் பஸ் நிலையம் போல ஏர்போர்ட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

English summary
Bangalore airport passengers got affected as taxis supports Karnataka Bandh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X