மாதந்தோறும் நீர் திறப்பு குறித்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் இல்லையாம்... கர்நாடகா #cauvery
டெல்லி: தமிழகத்துக்கு மாதந்தோறும் எவ்வளவு நீர் திறக்க வேண்டும் என்ற விவரம் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் இல்லை; ஆகையால் காவிரி நீரை திறக்க கோரும் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு வாதிட்டது.
காவிரியில் 50 டிஎம்சி நீரை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்துக்கு 20-ந் தேதி வரை 12,000 கன அடி நீரை கர்நாட்கா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கடந்த 18-ந் தேதி வரைதான் நீரை திறந்துவிட்டது கர்நாடகா. இந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது.
அப்போது கர்நாடகாவில் குடிப்பதற்கும் பாசனத்துக்கும் நீர் போதுமானதாக இல்லை. தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவதற்கு அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை.
மேலும் மாதந்தோறும் எவ்வளவு நீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடவில்லை. இப்படி தீர்ப்பில் தெளிவு இல்லாத நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என வாதிடப்பட்டது.
கர்நாடகாவின் இந்த வாதத்தை நிராகரித்த தமிழக அரசு தரப்பு, கர்நாடகா அணைகளில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய அளவுக்கு நீர் உள்ளது; தமிழகத்துக்கு நீரை திறக்காவிட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டியது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications