சட்டசபை வாசல் படியை தொட்டு கும்பிட்டு உள்ளே கால் வைத்த எடியூரப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா!

  பெங்களூரு: கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா அம்மாநில சட்டசபைக்கு சென்றுள்ளார்.

  கர்நாடக மாநில முதல்வராக பாஜக வேட்பாளரான எடியூரப்பா இன்று பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

  பலத்த எதிர்ப்புக்கிடையே கர்நாடகா முதல்வராக மூன்றாவது முறையாக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். மேலும் கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வர் ஆவார்.

  சட்டசபையில் எடியூரப்பா

  சட்டசபையில் எடியூரப்பா

  இந்நிலையில் பதவியேற்ற பின் எடியூரப்பா கர்நாடக சட்டசபைக்கு வந்தார். காங்கிரஸ், மஜத கட்சியினர் சட்டசபை வளாகத்திற்கு முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ள நிலையில் எடியூரப்பா சட்டசபைக்கு சென்றார்.

  முதல்வர் அறையில் பூஜை

  முதல்வர் அறையில் பூஜை

  சட்டசபை கட்டிடத்தில் உள்ள முதல்வர் அறையில் எடியூரப்பா சிறப்பு பூஜை செய்தார். சிறப்பு பூஜைக்கு பிறகு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் எடியூரப்பா.

  வாயிற்படியை வணங்கி

  வாயிற்படியை வணங்கி

  முன்னதாக சட்டசபைக்குள் நுழையும் முன்பு வாயிற்படியை தொட்டு கும்பிட்டு உள்ளே சென்றார் எடியூரப்பா. இதைத்தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்களுடன் பிற்பகல் 3 மணிக்கு முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்துகிறார்.

  பாஜக எம்எல்ஏக்கள்

  பாஜக எம்எல்ஏக்கள்

  பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் எடியூரப்பா எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது பெரும்பான்மையை நிருபிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Karnataka Chife Minister Yeddyurappa enters in Assembly. CM Yeddyurappa conducts discussion meeting with BJP MLAs in the evening.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற