'துணை முதல்வர்'... மடியில் கட்டிய பூனை மாதிரி.. ஒரே கோவிலில் டிகே சிவகுமாரிடம் சித்தராமையா பட்டபாடு!
பெலகாவி: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தமது குடும்பத்தினர் விரைவில் முடா முறைகேடு வழக்கில் இருந்து விடுதலையாக பெலகாவி எல்லம்மா கோவிலில் மனைவி பெயரில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அதே கோவிலில் சித்தராமையாவுடன் சென்ற துணை முதல்வர் டிகே சிவகுமார், சித்தராமையா பதவி விலகி தாம் விரைவில் முதல்வராக வேண்டும் என தனியே தியானம் செய்திருக்கும் சுவாரசியமான நிகழ்வு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியில் இருந்தாலும் அவரது தலைக்கு மேலே தொங்கும் கத்தியாக முடா நில முறைகேடு வழக்கு மட்டும் அல்ல... துணை முதல்வர் டிகே சிவகுமாரின் வியூகங்களும் இருக்கின்றன என்பது நாடறிந்த ஒன்று. சித்தராமையா எனும் அண்ணன் எப்ப கிளம்புவார் திண்ணை எப்ப காலியாகும் என்ற கதையாக அவரது முதல்வர் பதவி எப்போது பறிபோகும்; தமக்கு எப்ப முதல்வர் பதவி கிடைக்கும் என இலவு காத்த கிளியாக இருக்கிறார் துணை முதல்வர் டிகே சிவகுமார்.

சித்தராமையா மனைவி பார்வதிக்கு முடா எனும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்ததன் பின்னணியில் இருப்பதே துணை முதல்வர் டிகே சிவகுமார்தான் என மத்திய அமைச்சர் குமாரசாமி ஏற்கனவே பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். டிகே சிவகுமாரும் தம்மால் முடிந்த அளவுக்கு சித்தராமையாவுக்கு குழிபறித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பது கர்நாடகா அறிந்த ஒன்றுதான். இதற்கு பதிலடியாகவே, சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் எங்களுக்கும் துணை முதல்வர் பதவி கொடுங்க என டெல்லி மேலிடத்தை நெருக்கினர்.
ஆனால் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மரண அடி வாங்கியதைத் தொடர்ந்து கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி மேலிடம் வாய்ப்பூட்டு பூட்டதால் அனைத்து தரப்பும் கப்சிப் என அடங்கிக் கிடக்கின்றனர். அத்துடன் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக சித்தராமையாவை டிகே சிவகுமார் நேரில் சென்று சந்தித்தார். மேலும் பெலகாவிக்கு சித்தராமையாவும் டிகே சிவகுமாரும் ஒன்றாகவே சென்றனர்.
பெலகாவி எல்லம்மா தேவி கோவிலில் முடா வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டு மனைவி பார்வதி பெயரில் சித்தராமையா சிறப்பு பூஜைகள் செய்தார். இந்த சிறப்பு பூஜைக்கு பின்னர் சித்தராமையா கோவிலுக்கு வெளியே வந்துவிட்டார். ஆனால் அவருடன் சென்ற துணை முதல்வர் டிகே சிவகுமார் தன்னந்தனியே 10 நிமிடத்துக்கும் மேலாக தியானம் செய்து கொண்டிருந்தார். டிகே சிவகுமார் வரும் வரை சித்தராமையாவும் காத்திருந்தார். பின்னர் இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், முதல்வர் பதவியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சித்தராமையா சிறப்பு பூஜைகள் செய்கிறார். அதே கோவிலில் அவருடனே சென்ற துணை முதல்வர் டிகே சிவகுமார் வேறு எதற்காக தனியாக தியானம் செய்திருக்கப் போகிறார்? சித்தராமையாவின் முதல்வர் பதவி விரைவில் காலியாக வேண்டும்; தமக்கு அந்த பதவி கிடைக்க வேண்டும் என்பதற்குதான் என்கின்றனர் நமட்டுச் சிரிப்புடன்.
-
டிகே சிவக்குமாருக்கு சக்சஸ்.. ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications