கர்நாடகாவில் 150 இடமெல்லாம் கிடைக்காது.. பாஜக கனவு காணுகிறது.. மல்லிகார்ஜூன கார்கே பளீர்!

கர்நாடகாவில் பாஜக கட்சி 150 இடங்களை எல்லாம் பெறவே முடியாது, வேண்டுமென்றால் வெற்றிபெறுவது போல கனவு காணலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக கட்சி 150 இடங்களை எல்லாம் பெறவே முடியாது, வேண்டுமென்றால் வெற்றிபெறுவது போல கனவு காணலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி அளித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Karnataka Election: BJP wont win more than 70 seats, forget getting 150 says, Mallikarjun Kharge

இந்த தேர்தலுக்காக முதலில் பாஜக 150+ இடங்களை பெற வேண்டும் என்று திட்டமிட்டு உழைத்தது. ஆனால் கருத்து கணிப்புகளில் அப்படி ஒன்று நடக்க வாய்ப்பில்லை, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டது. இதனால் பாஜக 150 இடங்களை பிடிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு கூட்டணி உருவாக்க முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இதில் புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். பாஜக என்ன முயற்சி எடுத்தாலும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கவே முடியாது என்று கூறியுள்ளார். தேர்தல் நடக்கும் சமயத்தில் அவர் அளித்த பேட்டியில் முடிவுகள் குறித்து கண்டித்துள்ளார்.

நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், பாஜக அதிகபட்சம் 60-70 இடங்களைத்தான் கைப்பற்றும்.150 இடங்களை கைப்பற்றுவோம் என்பதை மறந்துவிட வேண்டியதுதான். கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கலாம் என்பது கனவு மட்டுமே.

இந்த முறை கர்நாடகாவில் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும். எப்போதும் இல்லாத வகையில், கர்நாடகாவில் தொடர்ந்து இரண்டு முறை ஒரு கட்சி வெற்றிபெற போகிறது. காங்கிரஸ் 150க்கும் அதிகமான இடங்களை கண்டிப்பாக பெறும் என்று மல்லிகார்ஜூன குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+