கர்நாடகா தேர்தல்: காங். தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும்.. தொங்கு சட்டசபை அமையும் - ஏபிபி சர்வே
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தொங்கு சட்டசபையே அமையும் என கருத்து கணிப்பில் தகவல்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தொங்கு சட்டசபையே அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஏபிபி செய்தி நிறுவனம் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடகத்தில் வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மொத்தம் 225 தொகுதிகளில் எத்தனை இடங்களில் மேற்கண்ட 3 கட்சிகள் வெற்றி பெறும் என்பது குறித்த சர்வேயை ஏபிபி செய்தி நிறுவனம் எடுத்துள்ளது.

தொங்கு சட்டசபை
கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 97 இடங்களும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடியூரப்பா தலைமையிலான பாஜகவுக்கு 84 இடங்களும் கிடைக்கும். முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்று கிங் மேக்கராக உருவெடுக்கும். தனிபெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தாலும் தொங்கு சட்டசபையே அமையும்.

சித்தராமையா ஆட்சியே வேண்டும்
காங்கிரஸ் கட்சிக்கு 38 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 33 சதவீத வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ஜேடிஎஸ் கட்சிக்கு 22 சதவீத வாக்குகளும் கிடைக்கும். கருத்து கணிப்பு எடுக்கப்பட்டவர்களில் ராகுல் காந்தியை மாநில விவசாயிகளுக்கு பிடித்திருப்பதால் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸுக்கு வாக்களிப்பதாக 40 சதவீத பேர் கூறியுள்ளனர். அதேவேளையில் 31 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிப்பதாக கூறுகின்றனர்.

என்ன காரணம்
சித்தராமையாவே முதல்வராக வர வேண்டும் என்பதே 33 சதவீத வாக்காளர்கள் கூறியுள்ளனர். பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு 27 சதவீதம் பேரும் , ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமிக்கு 22 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளே முக்கிய பிரச்சினையாக 29 சதவீதம் பேர் கூறுகின்றனர்.

சுமாரான செயல்பாடு
லிங்காயத்துகளுக்கு தனி மத அடையாளம் அளித்து அவர்களை சிறுபான்மையின பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்த போதிலும் அந்த சமூகத்தினரில் 61 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிக்கவே விரும்புகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 29 சதவீம் பேர் முழு திருப்தி உள்ளதாகவும் அதன் செயல்பாடுகள் சுமார்தான் என்று 43 சதவீதம் பேரும் கூறியுள்ளதாக அந்த கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications