கர்நாடக தேர்தல்: இலவச தோசை, இண்டர்நெட், காஃபி.. வாக்காளர்களை கவர சூப்பர் ஐடியா!
கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இலவசமாக தோசை, காஃபி, இண்டர்நெட் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இலவசமாக தோசை, காஃபி, இண்டர்நெட் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் அமைப்புகள் இதை செய்து வருகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது 3 மணி வரை 56 சதவிகித ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் நினைத்ததை விட இது கொஞ்சம் குறைவான வாக்குப்பதிவுதான். இதனால் வாக்கு அளிக்கும் நபர்களின் எண்ணிக்கையை தனியார் நிறுவனங்கள் வித்தியாசமாக அதிகரித்து வருகிறது.
அதன்படி பெங்களூரில் இருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு வந்தால், அவர்களுக்கு இலவசமாக ஒரு தோசை, காஃபி கொடுக்கிறார்கள். பெரும்பாலான கடைகளில் எல்லா வாக்காளர்களுக்கும் காஃபி கொடுக்கிறார்கள். விரலை காண்பித்து தோசை வாங்கி கொள்ளலாம்.
ராஜாஜி நகரில் உள்ள காஃபி கடை ஒன்றில், வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு இலவசமாக இண்டர்நெட் வழங்கப்படுகிறது. அதேபோல் அதே நகரில் உள்ள முடி திருத்தும் சலூன் ஒன்றில் வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவின் பெல்காவி தொகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் விலை ஒரு ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. வாக்களிப்பதை அதிகரிப்பதற்காக இப்படி செய்து இருக்கிறார்கள். பெங்களூரின் பெரும்பாலான இடங்களில் இப்படி கடைப்பிடித்து வருகிறார்கள்.
முதலில் இதை பெங்களூர் மாநகராட்சி நிர்வாகமே, தனியாரிடம் பேசி தள்ளுபடி கொடுக்க சொல்லலாம் என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால் கடைசியில் அரசியல் தலையீடு எதுவும் வந்துவிட கூடாது என்று விட்டுவிட்டனர். இதை தனியார்கள் தானாக விருப்பப்பட்டு செய்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications