ராகுல் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு.. முதல் ஆளாக போன் செய்து விசாரித்த மோடி!
ராகுல் காந்தி சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு பின் பிரதமர் மோடி அவருக்கு போன் செய்து நலம் விசாரித்து இருக்கிறார்.
பெங்களூர்: ராகுல் காந்தி சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு பின் பிரதமர் மோடி அவருக்கு போன் செய்து நலம் விசாரித்து இருக்கிறார்.
தற்போது கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. பிரச்சாரத்திற்காக நேற்று ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றார். ஆனால் அவர் சென்ற விமானம் பாதி வழியில் பெரிய பிரச்சனைக்கு உள்ளானது.

உயரத்தில் சென்று கொண்டு இருக்கும் போதே, விமானம் வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தது. முக்கியமாக ஒரு பக்கம் சரிந்து, கீழே வேகமாக சென்றது, விமானத்தை எவ்வளவு முயன்றும் விமானிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் இரண்டு முறை முயற்சித்தும் கூட விமானத்தை தரையிறக்க முடியவில்லை. பின் கடைசி நேரத்தில் மூன்றாவது முறையாக முயற்சித்து, ஹப்ளி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்கள். இதில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது விமானத்தில் ஏற்பட்ட சிறிய ''ஆட்டோ பைலட்'' எனப்படும் தானியங்கி விமான பிரச்சனை என்றும் கடைசி நேரத்தில் விமானி தானாக செயல்பட்டு விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தியிடம் மோடி போன் செய்து விசாரித்து இருக்கிறார். இந்த பிரச்சனை நடந்தவுடன் முதலில் போன் செய்து பேசியது மோடிதான் என்று காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது. இந்த விஷயத்தை பாஜக சாதாரண விஷயமாக கருதவில்லை, அவர்கள் இதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று காங்கிரஸ் தரப்பு பேசியுள்ளது.
ராகுல் காந்திக்கு கால் செய்த மோடி, அவரது உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார். இன்னும் பாதுகாப்பு அதிகரிப்பது குறித்து விவாதம் நடத்தியதாக காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது. ஆனால் ராகுலுக்கு பாதுகாப்பு அறிவிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அதேபோல் இந்த விமான பிரச்சனை வெளியே தெரிந்தவுடன், மோடி விமான துறைக்கு உடனடியாக விசாரிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனாலும் இந்த பிரச்சனை உண்மையாக ''ஆட்டோ பைலட்'' எனப்படும் தானியங்கி விமான இயக்கத்தால் வந்த பிரச்சனைதானா என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications