கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவே நீடிப்பார்.. நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு

கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவுக்கு எதிரான வழக்கு.. விசாரணை தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவே நீடிப்பார்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜக கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டது சரிதான், அவரே சபாநாயகராக நீடிப்பார் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

    இன்று பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

    Karnataka floor test: Congress filed Case against KG Bopaiah appointed as pro-tem speaker

    இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.

    இந்த நிலையில் தற்போது சபாநாயகரின் பங்கு இதில் முக்கியத்துவம் பெறுகிறது. பாஜகவை சேர்ந்த கே.ஜி. போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா இவரது தேர்விற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

    முதலில் கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். போப்பையா செய்யப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ், மஜத கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர் விதிமுறைகளை பின்பற்றி தேர்வு செய்யப்படவில்லை என்று இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளது.

    இதற்கு எதிராக, போப்பையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடந்து முடிந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் சார்பாக கபில் சிபல் ஆஜராகி உள்ளார். பாஜக சார்பில் முகுல் ரோத்தகி ஆஜராகில் உள்ளார். நேற்று இவர்கள்தான் இரண்டு கட்சிகளுக்கும் சார்பாக வாதாடியது. அதேபோல் நேற்றைய நீதிபதி சிக்ரி அமர்வே இந்த வழக்கையும் விசாரிக்கிறது. அதேபோல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் இறுதி கட்டத்தில் பாஜக சார்பாக ஆஜரானார்.

    போப்பையா நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை அவரின் நியமனத்தில் எந்த விதமான தவறும் இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.ஆளுநர் முடிவு சரியானதுதான் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    இதனால் கர்நாடக சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜக கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டது சரிதான், அவரே சபாநாயகராக நீடிப்பார் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+