கபினியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரை திடீரென திறந்துவிட்ட கர்நாடகா
கபினி அணை நிரம்பியதால் காவிரி நீரை திறந்துவிட்டது கர்நாடகம்.
Recommended Video

பெங்களூரு: கபினி அணைக்கு வினாடிக்கு 30,000 கனடி நீர் வந்து கொண்டிருப்பதால் 15,000 கன அடிநீரை தமிழகத்துக்கு திடீரென திறந்துவிட்டுள்ளது கர்நாடகா.
கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்து உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு பாடும் கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில்லை.
இந்நிலையில் காவிரி நீர் எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்றும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது.

செவிசாய்க்காது
கர்நாடகத்தில் காவிரி நீரை திறந்துவிடுமாறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும் எதற்கும் செவிசாய்க்காமல் இருந்தது கர்நாடகம்.

அணைகள் நிரம்பின
தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியுள்ளது. இந்த மழையால் கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

நீர் திறப்பு
கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக இருக்கிறது. இதனால் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி
கபினி அணையிலிருந்து காவிரி நீர் தமிழகத்தை 2 நாட்களில் வந்தடையும். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
“காவிரி அரசியல் ஆயுதம் அல்ல!” கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு.. மாணிக்கம் தாகூர் கண்டனம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications