கர்நாடகா: ஹாசனில் எஸ்ஐடி குழு.. பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களிடம் விசாரணை!
ஹாசன்: கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் பாஜக கூட்டணியான ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான ரேவண்ணா ஆகியோர் மீது பாலியல் பலாத்கார புகார்கள், ஆபாச வீடியோக்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் ஹாசனில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. பிரஜ்வல் போட்டியிட்ட ஹாசனில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவுக்கு முன்னதாக பல நூறு பெண்களை மிரட்டி பிரஜ்வல் பலாத்காரம் செய்தது, உல்லாசமாக இருந்தது தொடர்பான வீடியோக்கள் காட்டுத் தீயாக பரவி பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. இது கர்நாடகாவில் ஜேடிஎஸ்- பாஜக கூட்டணிக்கு மிகப் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் ஆணையமும் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பியது. இதனடிப்படையில் மாநில சிறப்பு புலனாய்வுக் குழு - எஸ்.ஐ.டி. விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இந்த விசாரணை உத்தரவு வெளியான நேரத்தில் இந்தியாவை விட்டே பிரஜ்வல் ரேவண்ணா தப்பி ஓடிவிட்டார்.
தற்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ஜேடிஎஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ஆகியோர் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட இருக்கின்றனர்.
இதனிடையே சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் நேற்று ஹாசன் சென்றனர். போலீஸ் எஸ்பி சீமா லட்கர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஹாசன் சென்றது. ஹாசன் எஸ்.பி. முகமது சுஜிதாவை சந்தித்து பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் ஒலேநரசிப்புரா போலீசார் பதிவு செய்த வழக்கு விவரங்கள், எஸ்.ஐ.டி. குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோக்களையும் எஸ்.ஐ.டி. குழு ஆய்வு செய்தது.
மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரம் செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களிடமும் எஸ்.ஐ.டி. குழு விசாரணை நடத்தியது. சில பெண்களிடம் வீடியோ கால் மூலமும் விசாரித்தனர் அதிகாரிகள். யார் யார் மிரட்டி பலாத்காரம் செய்தது? வீடியோவை பதிவு செய்தது யார் யார்? என்பது உள்ளிட்ட விவரங்களைப் பெண்களிடம் இருந்து எஸ்.ஐ.டி. குழு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். மேலும் 3,000-க்கும் மேற்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ், சிடிக்களையும் எஸ்.ஐ.டி. குழுவினர் பெற்றுக் கொண்டனர். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான எஸ்.ஐ.டி.குழுவின் விசாரணை படுதீவிரமாகி இருக்கிறது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications