For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவின் கோர முகம்.. புதிய ஹாட்ஸ்பாட்டுகளாகும் கர்நாடகா, தெலுங்கனா

Google Oneindia Tamil News

தெலுங்கானா/ பெங்களூரு: கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகின்றன. கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய ஹாட்ஸ்பாட்டுகளாக இம்மாநிலங்கள் உருவெடுத்துள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது7,43,481 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 2,65,670 பேர் குணமடைந்துள்ளனர்.

Karnataka, Telangana emerged as new Coronvirus hotspots

கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 20,653 ஆகவும் உள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 2,17,121 ஆக உயர்ந்திருக்கிறது.

இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் 1,18,594; டெல்லியில் 1,02,831 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 37,636; உத்தரப்பிரதேசத்தில் 29,968 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து புதியதாக தெலுங்கானவும் கர்நாடகாவும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. தெலுங்கானாவில் 27,612 பேருக்கும் கர்நாடகாவில் 26,815 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிகபட்சமாக 9,250 பேர் மரணித்துள்ளனர். இதனையடுத்து டெல்லியில் 3,165 பேரும் குஜராத்தில் 1978 பேரும் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1636 ஆகும்.

மிகமோசமான உச்சம் - யு.எஸ்-ல் ஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா! தென்னாப்பிரிக்காவில் விஸ்வரூபம் மிகமோசமான உச்சம் - யு.எஸ்-ல் ஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா! தென்னாப்பிரிக்காவில் விஸ்வரூபம்

உ.பி.யில் 827; தெலுங்கானாவில் 313; கர்நாடகாவில் 417 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் இதுவரை 802 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மிசோரம், அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Coronavirus Spread In Air? | Covid-19 airborne threat | Experts Warning

    English summary
    Telangana and Karnataka seem set to become the next Coronavirus hotspots in the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X