கர்நாடகா: மக்களிடம் பரிசுகளை கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய காங்கிரஸ்.. வீடியோ வெளியிட்ட பாஜக
கர்நாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் காங்கிரஸ் மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்டதாக பாஜக வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் காங்கிரஸ் மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்டதாக பாஜக வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சிலர் மக்களிடம் பரிசு பொருட்களை கொடுத்துவிட்டு, வாக்காளர் அட்டையை வாங்கும் காட்சி அதில் பதிவாகி உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 15ம் தேதி) நடைபெறும். மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பு ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கொத்தாக நிறைய வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 10,000 வாக்காளர் அடையாள அட்டை நேற்று முதல்நாள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒர வீட்டிற்குள் ஒரு மூட்டை முழுக்க இப்படி வாக்காளர் அடையாள அட்டை வைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து 24 மணி நேர விசாரணைக்கு மாநில தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.அவர்கள் அந்த அறையை சோதனையிட்ட போது, அதனுள் யாருமே இல்லை என்பது குறிப்பித்தக்கது. இதில் ஒரு நாள் விசாரணையின் முடிவில் ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் எதுவுமே போலியானது கிடையாது என்று தேர்தல்ஆணையம் கூறியுள்ளது.
ஆனாலும் ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கில் உண்மையான அடையாள அட்டைகள் இருந்தது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. பாஜகவின் உறுப்பினர் மஞ்சுளா நஞ்சமரி என்பவர்தான் அந்த கட்டிடத்திற்கு உரிமையாளர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவர் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் இந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 222 தொகுதிகளில் மட்டும்தான் வாக்கெடுப்பு நடத்தது. இந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்று உருவாகி உள்ளது.
ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் புதிய திருப்பமாக, வாக்காளர்களிடம் அடையாள அட்டையை பெற்று கொண்டு காங்கிரஸ் கட்சியினர் பரிசு பொருட்களை வழங்குவது போன்ற வீடியோவை பாஜகவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் இருப்பது காங்கிரஸ் கட்சியினர்தான் என்று பாஜகவினர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரிசு பொருட்டாக்களை கொடுத்துவிட்டு, காங்கிரஸ் கட்சி வாக்காளர் அட்டைகளை மக்களிடம் இருந்து வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications