காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரை திறக்க கர்நாடகா திடீர் முடிவு!!
பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரைத் திறக்க கர்நாடகா அரசு திடீரென முடிவு செய்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் கர்நாடகா அதை அமல்படுத்தவில்லை. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் கர்நாடகா அரசு எதிர்த்தது. மத்திய அரசும் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே பெங்களூருவில் இன்று கர்நாடகா சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தின் முடிவில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரை திறக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் கர்நாடகாவின் 4 அணைகளில் 34.13 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. இதனால் பெங்களூரு குடிநீர், மாண்டியா மற்றும் தமிழகத்தின் பாசன தேவைகளுக்கு வினாடிக்கு 10,000 கன அடிநீரை திறக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications