மைசூரில் காதலியை சாக்கடையில் தள்ளி உயிருடன் எரித்துக் கொன்ற வாலிபர்
மைசூர்: கர்நாடகாவில் 22 வயது பெண்ணை வாலிபர் ஒருவர் தாக்கி சாக்கடையில் தள்ளி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா தேவி(22). அவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரமோத் குமார்(25) என்பவரை காதலித்துள்ளார். வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமான பிரமோத் கிருத்திகா உள்பட பல பெண்களை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கிருத்திகா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரமோத் குமாரை வலியுறுத்தி வந்துள்ளார். இதையடுத்து அவர் கிருத்திகாவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து கிருத்திகாவின் தொல்லை அதிகரித்ததால் அவரை கொலை செய்ய பிரமோத் முடிவு செய்தார். இதையடுத்து அவர் கிருத்திகாவை காரில் மைசூருக்கு அழைத்துச் சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
டிசம்பர் 21ம் தேதி பிரமோத் கிருத்திகாவை காரில் வைத்து ஆள்நடமாட்டம் இல்லாத ஜெயபுரா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரமோத் இரும்புக் கம்பியால் கிருத்திகாவை அடிக்க அவர் மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து பிரமோத் கிருத்திகாவை தூக்கிச் சென்று சாக்கடையில் போட்டுவிட்டு காரில் சென்றுவிட்டார்.
சில நிமிடங்கள் கழித்து வந்த பிரமோத் சாக்கடையில் பெட்ரோல் ஊத்தி, கிருத்திகாவை உயிருடன் எரித்துக் கொன்றார். சாக்கடையில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானவற்றை ஆய்வு செய்து பிரமோதை பிடித்தனர்.
விசாரணையில் பிரமோத் முதலில் பொய் கூறியுள்ளார். பிறகு தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். வெளியூர் என்பதால் கிருத்திகாவை கொலை செய்துவிட்டு போலீசில் இருந்து எளிதில் தப்பிவிடலாம் என்று பிரமோத் நினைத்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications