ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் 8 மணி நேரம் சிபிஐ விசாரணை! 28ல் மீண்டும் ஆஜராகிறார்
ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் டெல்லியில் சிபிஐ முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆஜராகி சுமார் 8 மணி நேரம் விளக்கம் அளித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்தார் என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது சிபிஐ.

ஆனால் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது சிபிஐ.
இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகத்தான் வேண்டும் என கண்டிப்புடன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜரானார். காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம் இரவு 7 மணிக்குதான் விசாரணை நிறைவடைந்தது. 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு கார்த்தி சிதம்பரம், சிபிஐ அலுவலகத்திலிருந்து கிளம்பினார். இதனால் பரபரப்பு நிலவியது.
இதனிடையே,கார்த்தி சிதம்பரத்திடம் ஆகஸ்ட் 28ல் மீண்டும் விசாரிக்க உள்ளது சிபிஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications