சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை

கருணாநிதி எழுதிய கடிதத்த்தில் கூறியுள்ளதாவது:
‘'கடந்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி தமிழ்நாட்டின் 6 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் சென்னையில் தி.மு.க. பிரதிநிதியான என்னை சந்தித்தனர். இலங்கை கடற்படையினரால் தாங்கள் படும் துன்பங்களையும், தங்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருப்பதையும், வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அற்ற நிலை இருப்பதையும் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள், கொடுமைகள், துயரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே.அதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை வேதனைக்குரியதாகி வருகிறது. தமிழக மீனவர்களின் இந்த துயரம் ஒரு தனிப்பட்ட நபரால் அல்ல. ராணுவத்தின் ஒரு பிரிவினரால் ஏற்படுகிறது. துப்பாக்கி சூடு, படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல், பிடித்த மீன்களை பறித்து கொண்டு அவர்களை விரட்டியடிப்பது போன்ற செயல்களை இலங்கை கடற்படை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இச்சம்பவங்கள், இறுதி கட்ட போர் முடிந்த 2009-ம் ஆண்டில் இருந்து மிக அதிக அளவில் நடந்து வருகிறது. நமது மீனவர்களை கைது செய்து இலங்கை சிறைகளுக்கு அனுப்புவது தடுக்கப்படாத கடுமையான நடவடிக்கையாக உள்ளது.
இவர்களின் படகுகளை கூட இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது போன்ற இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் தமிழ் சமுதாய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகும் அவர்களது படகுகளை திரும்ப வழங்க மறுத்துவிட்டனர். மேலும் அவர்களை திரும்ப யாழ்ப்பாணம் மாகாணத்தில் உள்ள காங்கே சன் துறைக்கு இலங்கை கடற்படையினர் திரும்ப அனுப்பியுள்ளனர்.இது போன்ற சம்பவம் கடந்த 7 ஆண்டுகளில் தற்போது தான் முதன்முறையாக நடந்துள்ளது.
இலங்கை கடற்படை வேண்டுமென்றே நடத்தி வரும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் இதுவரை பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி கடந்த 1983-ம் ஆண்டுக்கு பிறகு 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். இதில் 1991 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் 118 மீனவர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.
கடந்த 30 ஆண்டுகளில் தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் 480 தடவை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கிய இந்த துப்பாக்கி சூட்டின் சத்தம் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இதுபோன்ற காட்டு மிராண்டிதனமான செயல்களை சர்வதேச சமுதாயம் மிக கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால் இக்கொடுஞ்செயலை இந்திய அரசு தடுத்து நிறுத்தவில்லை.
இது குறித்து கடந்த செப்டம்பர் 28-ந்தேதி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் வழக்கம் போன்று மத்திய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார். அக் கடிதத்தில் இலங்கை சிறையில் வாடும் 136 மீனவர்களையும், 29 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
அதை தொடர்ந்து நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் பாம்பனை சேர்ந்த 60 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்களின் மீன்பிடி படகுகள் இன்றி மனவேதனையுடன் திரும்பி யுள்ளனர்.
எனவே, இது போன்ற கொடுமையான நடவடிக்கைகளை தடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தூதரகம் மூலம் அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தும், இவர்களின் படகுகளை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு செல்லும் நமது வெளியுறவு மந்திரி இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இலங்கை கடற்படையின் கொடூர நடவடிக்கையை உணர செய்யும்படி எடுத்துரைக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வு கண்டால் தி.மு.க. ஆழ்ந்த மகிழ்ச்சி அடையும்''என்று தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்தின் நகலை மத்திய வெளியுறவு சல்மான் குர்ஷித்திடமும் கனிமொழி எம்.பி. நேரில் வழங்கினார்.












Click it and Unblock the Notifications