காஷ்மீர் மலைப்பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 17 பேர் பலி
காஷ்மீரில் மலைப்பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.
காஷ்மீர்: காஷ்மீரில் மலைப்பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.
காஷ்மீர் அருகே இருக்கும் தாக்கரே என்ற பகுதி அருகே உள்ள மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வளைவான பாதையில் சென்ற பேருந்து சாலையில் திரும்பும் போது கட்டுப்பாடு இன்றி சென்று பள்ளத்தில் விழுந்துள்ளளது.

பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 17 பேர் பலியாகி உள்ளனர். பேருந்து விபத்தில் மொத்தம் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அங்கு மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனாலும் பள்ளம் காரணமாக 5 மணி நேரம் மீட்பு பணி நடந்தது.
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சமும் காயம் பட்டவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications