For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் 2017-ல் 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் 2017-ல் மட்டும் 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2017-ம் ஆண்டு மட்டும் 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகரில் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ்.சாந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Kashmir needs to be free from violence, terror, guns and drugs: Army

2017-ம் ஆண்டு மட்டும் ஜம்மு காஷ்மீரில் 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 80 பேர் உள்ளூர் தீவிரவாதிகள். 110 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த 110 வெளிநாட்டினரில் 66 தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 125 முதல் 130 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீர் நிலவரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வன்முறை, பயங்கரவாதம், துப்பாக்கிகள், போதைப் பொருட்களின் பிடியில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு விடுவிக்கப்பட வேண்டும். விரைவில் வன்முறையற்ற காஷ்மீரை நாம் காணப் போகிறோம். ஜம்மு காஷ்மீரில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஊருவல் எதுவும் இல்லை.

இவ்வாறு ராணுவ தளபதி சாந்து தெரிவித்தார்.

English summary
The Indian Army and Jammu and Kashmir Police on Sunday said that they have killed 190 terrorists as on date in 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X