காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம் - போலீஸ் எஸ்.ஐ. குண்டுவீசி படுகொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நேற்று இரவு தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்தது. அதன் பின்னர், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அங்கு தீவிரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்தது காஷ்மீரில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு உத்வேகம் அளித்ததால் அங்கு மீண்டும் தீவிரவாதிகளின் அராஜகம் தலைதூக்கியுள்ளது.

காவல்துறையினர், வெளிமாநிலத்தவர்கள், காஷ்மீர் பண்டிட்டுகள் ஆகியோரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் கூட தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், காஷ்மீரின் குல்ஹாம் மாவட்டத்தில் உள்ள கொய்மா பகுதியில் நேற்று இரவு காவல் உதவி ஆய்வாளர் தஹீர் கான் (40) தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த தீவிரவாதிகள் அவர் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த தஹீர் கானை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 11-ம் தேதி தீவிவராதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இவர்களில் தமிழக ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications