‘இங்கிலாந்தின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா’... மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கட்ஜூ
டெல்லி: இங்கிலாந்தின் ஏஜெண்டாக மகாத்மா காந்தி செயல்பட்டார் என விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அந்தவகையில், தற்போது தேசப்பிதா மகாத்மா காந்தி இங்கிலாந்தின் ஏஜெண்டாக செயல்பட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கட்ஜூ.
மேலும், அதில் அவர் ‘மகாத்மா காந்தியின் உரைகள் மற்றும் செயல்பாடுகள் அவர் பிரிட்டிஷ் ஏஜெண்டாக செயல்பட்டதற்கு ஆதாரமாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு ஜாதி, மதம், இனம், மொழி உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவற்றைப் பிரிக்க ஆங்கிலேயர்கள் செய்த சதிக்கு மகாத்மா உடந்தையாக இருந்தார்' என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், தன்னை சனாதன இந்து என வெளிப்படையாகவே கூறிய காந்தி, வர்ணாசிரம தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும், பசுக்களைப் பாதுக்காக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டார். காந்தியின் இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் பிரிவினைவாதம் உருவாக தூண்டுதலாக அமைந்தது.
ரகுபதி ராகவ ராஜா ராம் என்ற இந்து பஜனைப் பாடலை தனது பொதுக்கூட்டங்களில் மக்களைப் பாட வைத்தார் காந்தி. இதனால் மற்ற மதத்தினர் மனம் புண்பட்டனர்' என அதில் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனைக் கொண்டே இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதாகவும், மற்றபடி தான் ஒரு விளம்பரப் பிரியரல்ல என்றும் கட்ஜூ அதில் கூறியுள்ளார்.
மகாத்மா குறித்த கட்ஜூவின் இந்தக் கருத்தால் புதிய சர்ச்சை உண்டாகியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications