டெல்லியில் ஓராண்டை நிறைவு செய்த கெஜ்ரிவால் அரசின் சாதனைகளும், சோதனைகளும்
டெல்லி: அரவிந்த் கெத்ரிவால் தலைமையிலான அரசு டெல்லியில் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஆட்சி பொறுப்பேற்றது. கெஜ்ரிவால் அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மக்களிடையே கெஜ்ரிவால் மிகவும் பிரபலமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பந்தம்
கடந்த ஆண்டு இதே நாளில் தான் டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீது காதல் கொண்டனர். இந்த பந்தம் ஆழமானது, என்றும் தொடரும் என்று ட்வீட் செய்துள்ளார் கெஜ்ரிவால்.

கார் கட்டுப்பாடு
டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கெஜ்ரிவால் அரசு கார் கட்டுப்பாட்டு முறையை அமல்படுத்தியது. முதலில் மக்கள் அந்த முறை பற்றி விமர்சித்தாலும் பின்னர் ஏற்றுக் கொண்டு பாராட்டினர். இது கெஜ்ரிவால் அரசின் வெற்றிகளில் ஒன்று.

மீண்டும்
கார் கட்டுப்பாட்டு முறை சோதனை முறையில் முதலில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து மக்களின் கருத்தை அறிய [email protected] என்ற இமெயில் ஐடியை அரசு அறிவித்தது.

பள்ளிகள்
தனியார் பள்ளிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் நர்சரி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு கெஜ்ரிவால் அரசு தடை விதித்தது. மேலும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பிக் கொடுக்குமாறு அரசு உத்தரவிட்டதும் மக்கள் மனதை கவர்ந்தது.

மருத்துவமனைகள்
மருத்துவமனைகளில் யாரையாவது அனுமதிக்க மறுத்தால் அது குறித்து தகவல் அளிக்க ஹெல்ப்லைன் எண்ணை அரசு அறிமுகப்படுத்தியது. மேலும் 1,000 ஏசி டிடிசி பேருந்துகளை இயக்கியது, டெல்லி வாலிபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பயிற்சி அளித்தது, குப்பையை அகற்ற பொதுப்பணித்துறை குழுவை அமைத்தது, ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த புதிய கொள்கைகளை அறிவித்தது ஆகியவை மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

கரும்புள்ளி
ஊதிய பாக்கி கேட்டு வேலை நிறுத்தம் செய்யும் டெல்லி மாநகராட்சி ஊழியர்களை கண்டுகொள்ளாதது, விளம்பரத்திற்கு ரூ.60 கோடி செலவு செய்தது, கெஜ்ரிவால் மீது மை வீச்சு நடந்தது ஆகியவை ஆம் ஆத்மி அரசுக்கு ஏற்பட்ட கரும்புள்ளிகள் ஆகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications