ஊழல் புகாரில் சிக்கிய டெல்லி அமைச்சர் டிஸ்மிஸ்; வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பு- கேஜ்ரிவால் அதிரடி!
டெல்லி: ஊழல் புகாரில் சிக்கிய டெல்லி மாநில உணவுத்துறை அமைச்சர் ஆசிம் அகமதுகான் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைத்துள்ளார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் கேஜ்ரிவால் கூறியதாவது:
உணவுத்துறை அமைச்சர் ஆசிம் அகமதுகான் மீது ஊழல் புகார் எங்களுக்கு வந்தது. இது தொடர்பான 1 மணிநேர வீடியோ காட்சிகளை நானும் மணீஷ் சிசோடியாவும் பார்த்தோம்.

ஊழல் புகாருக்கு உள்ளானது என் மகனாக இருந்தாலும் கடும் நடவடிக்கைதான் எடுக்கப்படும். உணவுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆசிம் அகமதுகான் நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக இம்ரான் உசைன் நியமிக்கப்படுகிறார்.
மேலும் ஆசிம்கான் மீதான புகார் விசாரணைக்காக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும். நாங்கள் ஊழல் புகாருக்குள்ளான அமைச்சரை நீக்கியுள்ளோம்.
இதேபோல் ஊழல் புகாருக்குள்ளான ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
ஊழல் புகாருக்குள்ளான ஆம் ஆத்மி அமைச்சரை நீக்கிவிட்டதாக தெரிவித்த கெஜ்ரிவால், இதே போல என வலியுறுத்தினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications