ஆம் ஆத்மி கட்சிப் பொறுப்புகளில் ஆதரவாளர்களை அதிரடியாக நியமித்த அரவிந்த் கேஜ்ரிவால்!!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண் நீக்கப்பட்டுள்ளார். இதேபோல ஆம் ஆத்மியின் கட்சிப் பொறுப்புகளில் அதிருப்தியாளர்களை அதிரடியாக நீக்கிவிட்டு தமது ஆதரவாளர்களை நியமித்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, கட்சியின் நிறுவனர்களில் முக்கியமானவர்களான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் ஆம் ஆத்மியில் கடந்த சில வாரங்களாக உட்கட்சி பூசல் நீடித்து வருகிறது.
இந்த 2 அதிருப்தி தலைவர்களையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மற்ற தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

பதவி பறிப்பு
இந்நிலையில் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண், ஆம் ஆத்மியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக தினேஷ் வகேலா தலைமையில் ஆசிஷ் கேதான் மற்றும் குப்தா ஆகியோரை கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ராம்தாசும் நீக்கம்
மேலும் ஆம் ஆத்மியின் லோக்பால் அமைப்பின் தலைவராக இருந்த முன்னாள் கடற்படை தளபதி ராம்தாசும் நீக்கப்பட்டு உள்ளார். அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையை விமர்சித்து கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழுவுக்கு இவர் கடிதம் எழுதியிருந்தார்.

புதிய லோக்பால் குழு
ராம்தாசுக்கு பதிலாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகளான என்.திலிப் குமார், ராகேஷ் சின்கா மற்றும் கல்வியாளர் எஸ்.பி.வர்மா ஆகியோரை கொண்ட புதிய லோக்பால் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மியின் அவசர செயற்குழு கூட்டத்தில் இந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா கூறியுள்ளார்.

போராட்ட குழு
மேலும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வரும் ஏப்ரல் 22-ந் தேதி நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை இலியாஸ் ஆஸ்மி, பிரேம் சிங் பஹாரி, யோகேஷ் தாஹியா, சோமேந்திரா தாக்கா, குர்னம் சிங், கிரண் பிசா ஆகியோர் அடங்கிய குழு மேற்கொள்ள உள்ளது.

மாநிலங்களுக்கான குழு
மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை அமைப்பு ரீதியில் பலப்படுத்தும் நோக்கில் அரசியல் விவகாரங்கள் குழு உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் சிங் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மற்ற மாநிலங்களில் கட்சியின் தற்போதைய நிலை குறித்த ஆய்வறிக்கையை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமையிடம் இக் குழு அளிக்கும்.

அத்வாலே
இதனிடையே, ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்ட யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரை இந்தியக் குடியரசுக் கட்சியில் இணைய வருமாறு அக்கட்சியின் தலைவரும், லோக்சபா எம்.பி.யுமான ராம்தாஸ் அத்வலே அழைப்பு விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications