தர்ணாவில் ஈடுபட்டு 36 மணி நேரம் ரோட்டிலேயே கழித்த கெஜ்ரிவால் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லா ஆகியோர் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, டென்மார்க் பெண் கற்பழிப்பில் சரியான நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும், டெல்லி போலீசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.
இதில் 4 போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கெஜ்ரிவால் அரசின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே உடனடியாக ஏற்கவில்லை.

இதைக்கண்டித்து, அரவிந்த் கெஜ்ரிவால், அவரது அமைச்சரவை சகாக்கள் கட்சித்தொண்டர்கள் டெல்லியில் இரண்டு நாட்கள் வீதியில் இறங்கி தடையை மீறி தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப்பகுதி முடங்கியது.
இரு நாட்களாக இரவு பகலாக கடும் குளிரில் அவரது போராட்டம் நடத்தது. இந் நிலையில் நேற்று திடீரென மழையும் பெய்தது. ஆனாலும் விடாது போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து டெல்லி துணை நிலை ஆளுநர் இது தொடர்பான விரைவான விசாரணை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து தனது போராட்டத்தை கெஜ்ரிவால் கைவிட்டார்.
இந்த நிலையில், டெல்லி ரயில் பவனில் 144 தடை உத்தரவை மீறி போராட்டம் செய்த ஆம் ஆத்மி கட்சியினர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை.
இதனிடையே, போராட்டத்தில் 33 மணி நேரம் தொடர்ந்து ரோட்டிலேயே கழித்த அரவிந்த கெஜ்ரிவால், இன்று உடல்நலக்குறைவால் யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடிய விடிய சாலையில் தூங்கியதாலும், மழையிலும், குளிரிலும் நனைந்து போரடியதாலும் கெஜ்ரிவால் காய்ச்சலினால் அவதிப்படுவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications