குடியரசு தின விழாவின்போது 'ராஜ்பாத்'தை முற்றுகையிடுவோம்.. கெஜ்ரிவால் 'வார்னிங்'!
டெல்லி:மத்திய அரசுடன் சமாதானமாகப் போவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறினால் குடியரசு தின விழாவின்போது ராஜ்பாத்தை எங்களது லட்சக்கணக்கான தொண்டர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று கெஜ்ரிவால் திடீரென மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் கூறும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எங்களிடம் மாற்றம் ஏதும் இல்லை.

எங்களது போராட்டத்தை முடிக்க சமாதானப் பேச்சுக்கெல்லாம் இடமில்லை. டெல்லியில் பெண்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இங்கு போராட்டம் நடத்துவோர் பாகிஸ்தானியர்களோ அல்லது அமெரிக்கர்களோ அல்ல. சொந்த மக்கள்.
குடியரசு தின விழாவைக் கொண்டாடுவோம் என்று கூறுகிறார் ஷிண்டே. யாருக்காக இதைக் கொண்டாடப் போகிறீர்கள்.. அணிவகுப்பையும், அலங்கார ரதங்களையும் விஐபிக்கள் பார்த்து ரசிப்பார்கள். அது குடியரசு தின கொண்டாட்டம் அல்ல.
எங்களது போராட்டம் தொடரும். எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் குடியரசு தின விழா அணிவகுப்பின்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் ராஜ்பாத்தை முற்றுகையிடுவார்கள் என்று மிரட்டுவது போலக் கூறினார் கெஜ்ரிவால்.
டெல்லியை விளாசிய மழை.. கடும் குளிர்
இதற்கிடையே, டெல்லியை இன்று கன மழை குளிர வைத்து விட்டது. கூடவே கடும் குளிரும் சேர்ந்ததால் மக்கள் நடுங்கிப் போய் உள்ளனர். இந்த மழை மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மியினர் நார்த் பிளாக் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த மழையும் சேர்ந்து கொண்டதால அவர்கள் கடும் குளிரில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
காருக்குள் தஞ்சமடைந்த கெஜ்ரிவால்
கன மழை பெய்ததால் கெஜ்ரிவால் தனது காருக்குள் ஏறி தஞ்சமடைந்தார். அதேபோல மற்றவர்களும் தத்தமது வாகனங்கள், குடைகளுக்குள் புகுந்து கொண்டு மழையிலிருந்து சற்று தப்பித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications