அங்கன்வாடிகளில் இனி உப்புமாவுக்கு பதில் பிரியாணி! ஒரே வீடியோவில் மெனுவை மாற்றிய சிறுவன்! சபாஷ் கேரளா

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் அங்கன்வாடி மையங்களில் இனி உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் கேரளா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஆன ஜார்ஜ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ஷங்கு தனக்கு உப்புமாவுக்கு பதில் பிரியாணி தந்தால் நன்றாக இருக்கும் என பேசிய வீடியோ வேகமாக பரவிய நிலையில் தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தமிழகத்தை போலவே கேரளாவிலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசு நிதி உதவியுடன் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

கேரளாவைப் பொறுத்தவரை தற்போது அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு, உப்புமா, கிச்சடி, பருப்பு சாதம் , சோயா மசாலா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடியில் பிரியாணி வழங்க வேண்டும் என பேசிய சிறுவனின் வீடியோ அதிகமாக பகிரப்பட்டது.

thiruvananthapuram kerala anganwadi

அதில் தொப்பி அணிந்து பேசிய ஷங்கு என்ற குழந்தை, தங்கள் அங்கன்வாடியில் தினமும் உப்புமா தான் வழங்குகிறார்கள். உப்மாவுக்கு பதிலாக பிர்னாணி ( பிரியாணி ) மற்றும் பொரிச்ச கோழி வேண்டும் என தனது தாயிடம் கேட்டிருந்தார். அவ்வாறு பேசிக் கொண்டே குழந்தையை சமாளித்து உணவு ஊட்டி இருந்தார். அந்த தாய் அந்த வீடியோவை ஷங்குவின் தாயார் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் அதனை ட்ரெண்ட் ஆக்கினர்.

இந்த நிலையில் இந்த வீடியோ கேரள மாநில சுகாதார மற்றும் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து அந்த வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையில் பேஸ்புக் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர் அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர்,' ஷங்குவின் பரிந்துரையை கணக்கில் எடுத்துக் கொண்டு மெனு மதிப்பாய்வு செய்யப்படும். அவர் பிரியாணியும் பொரிச்ச கோழியும் வழங்க வேண்டும் என கேட்டு இருக்கிறார். தற்போது அங்கன்வாடிகள் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன. அந்த வகையில் ஷங்குவின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும், அங்கன்வாடி மெனு மாற்றப்படும்" எனக் கூறியிருந்தார்.

தொடர்ந்து இதனை கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜார்ஜின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு அங்கன்வாடி மையங்களில் உணவு மெனுவை கேரள அரசு மாற்றி அமைத்து கூடுதலாக மற்றும் சுவையான சத்தான உணவுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் அங்கன்வாடிகளில் முட்டை பிரியாணி, புலாவ், பருப்பு பாயாசம், சோயா டிரை கறி, லட்டு, ஊட்டச்சத்து மிக்க பயிறு உருண்டை ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மெனு மூலம் இதுவரை இருந்த அடிப்படை உணவு வகைகள் மாறி ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும், சிறந்த ஊட்டச்சத்தை தரும் உணவு வழங்கப்படும் என அமைச்சர் ஜார்ஜ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+