தமிழக இளைஞர் முருகன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி… கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
சிகிச்சை அளிக்க மறுத்து உயிரிழந்த தமிழக இளைஞர் முருகனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: மருத்துவமனையில் உரியச் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், கொல்லத்தில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு முருகனும், முத்துவும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு முருகனைத் தவிர மற்ற 3 பேரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அனுமதி இல்லை
முருகனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கொல்லத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர்.

அலைக்கழிப்பு
இதனைத் தொடர்ந்து மெடிசிட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எஸ்.யு.டி மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு முருகனை அழைத்துச் சென்றும் எங்கும் அவருக்குச் சிகிச்சை அளிக்கவில்லை. தொடர்ந்து 7 மணி நேர அலைச்சலுக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரள அரசின் மீது கண்டனங்கள் பாய்ந்தது.

முதல்வர் மன்னிப்பு
இந்நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், நடந்த தவறுக்காக தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கொந்தளிப்பு சற்று ஓய்ந்தது.

ரூ.10 லட்சம் நிதியுதவி
இதனைத் தொடர்ந்து, இன்று முருகனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். முருகனின் குழந்தைகளின் கல்வியை சிபிஎம் கட்சியின் கொல்லம் மாவட்டம் குழு நேற்று ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications