சிகிச்சை கிடைக்காமல் பலியான முருகன் குடும்பத்தை சந்தித்து பினராயி விஜயன் ஆறுதல்
திருவனந்தபுரம்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், கொல்லத்தில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு முருகனும், முத்துவும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு முருகனைத் தவிர மற்ற 3 பேரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த, தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரை, முதல்வர் பிணராயி விஜயன் இன்று சந்தித்தார். pic.twitter.com/qSw7JP2ml9
— CMO Kerala (@CMOKerala) August 16, 2017
பல்வேறு மருத்துவமனைகளுக்கு முருகனை அழைத்துச் சென்றும் எங்கும் அவருக்குச் சிகிச்சை அளிக்கவில்லை. தொடர்ந்து 7 மணி நேர அலைச்சலுக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரள அரசின் மீது கண்டனங்கள் பாய்ந்தது. இதையடுத்து சம்பவத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்பு கேட்டார்.
மேலும், மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த, முருகனின் குடும்பத்தாரை, முதல்வர் பிணராயி விஜயன் இன்று சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். முருகன் குடும்பத்தாருக்கு அவசியமான உதவிகளை அரசு வழங்கும் எனவும், அவர்களின் இழப்பிலும் துயரத்திலும் கேரள மக்கள் பங்குகொள்வதை தெரிவித்தார். மேலும் முருகன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications