திருமண ஆல்பத்துக்காக படகில் போஸ் கொடுத்தபோது.. ஆற்றில் விழுந்த கேரள ஜோடி. வைரல் வீடியோ
Recommended Video
கொச்சி: கேரளாவைச் சேர்ந்த இளம் ஜோடி, திருமணத்திற்கு முந்தைய புகைப்பட ஆல்பத்துக்காக போஸ் கொடுத்தபடி படகில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருமணத்துக்கு தயாராகி வரும் ஒவ்வொரு ஜோடிக்குமே தங்களது திருமண ஆல்பம் சிறப்பாக வர வேண்டும். எல்லோரையும் கவர வேண்டும். ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
அப்படித்தான் கேரளாவைச் சேர்ந்த டிஜின் மற்றும் சில்பா ஜோடி ஆசைப்பட்டு உள்ளது. இவர்களுக்கு வரும் மே 6ம் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
காதல் ஜோடி
டிஜின் ஷில்பா ஜோடி, தனியார் புகைப்பட நிறுவனத்திடம் தங்களது ஆசையை சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக செஞ்சுடுவோம் என கூறி கேரளாவின் பம்பா நதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

காதல் செய்ய உத்தரவு
அங்கு இருவரையும் ஒரு படகில் உட்கார வைத்து போஸ் கொடுக்க வைத்தனர். மற்றொரு படகில் கேமராமேன் புகைப்படம் எடுத்தார். அப்போது வாழை இலையை தலைமேல் பிடித்துக்கொண்டு ஜோடிகள் இருவரும் கண்களால் காதல் செய்யும்படி கேமராமேன் கட்டளையிட்டார்,

புகைப்படம்
அப்போது கூட இருந்தவர்கள் மழை துளி அவர்கள் விழும் வண்ணம் தண்ணீரை அவர்கள் மீது தெளித்தனர். இந்த காட்சிகள் படமாகிக்கொண்டிருந்த அந்த வேளையில் காதல் செய்த ஜோடிகள் இருவரும் தண்ணீருக்குள் தவறிவிழுந்தனர். அவர்கள் விழும் போது ஒவ்வொரு பிரேமையும் ஒளிப்பதிவாளர் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

வைரலுக்காக செய்யப்பட்டதா
இந்நிலையில் தவறி விழுந்த ஜோடிக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனெனில் அவர்கள் தவறிவிழுந்த இடத்தில் தண்ணீரின் ஆழம் குறைவாக இருந்தது. இதனால் தப்பினார்கள். அதேநேரம் வீடியோ மற்றும் புகைப்படம் நேச்சுரலாக வர வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே கீழே தள்ளப்பட்டனரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications