முல்லைப் பெரியாறு: கார் பார்க்கிங் அமைப்பதற்கான பணிகளை மீண்டும் தொடங்குகிறது கேரளா!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான பணிகளை மீண்டும் தொடங்க கேரளா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கானப் பணிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

வாகன நிறுத்துமிடம்
தேக்கடிக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியை தேர்வு செய்து, அந்த இடத்தை இரவு பகலாக சீரமைக்கும் பணியில் கேரள வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்மட்டம் உயர்த்துவதை தடுக்க
முல்லைப் பெரியாறு அணைநீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் நோக்கத்தோடு, கேரள வனத்துறை முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில், சுற்றுலாப் பயணிகளுக்காக பிரம்மாண்டமான வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
தேக்கடி சுற்றுலா பயணிகள்
தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், தற்போது முல்லைப் பெரியாறு ஏரியின் படகு நிறுத்தப் பகுதிக்கு 1 கி.மீ. முன்னதாக உள்ள ஆமை பார்க் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு வருகிறது.
தேசிய புலிகள் காப்பகம்
பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் தேக்கடி அமைந்துள்ளதால், வாகனங்கள் எழுப்பும் ஒலியால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகப் புகார் வந்ததாம். எனவே, வாகனங்கள் நிறுத்தும் இடத்தை வேறு பகுதிக்கு மாற்றவேண்டும் என, கடந்த ஆண்டு கேரள வனத் துறைக்கு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டதாம்.
நீர்பிடிப்பு பகுதியில்
எனவே, வாகனங்களை நிறுத்துவதற்கு, குமுளி அருகே உள்ள ஆனைவச்சால் என்ற இடத்தை, கேரள வனத் துறையினர் அவசரம் அவசரமாகத் தேர்வு செய்துள்ளனர். ரூ. 10 கோடி மதிப்பில், நீர்ப்பிடிப்புப் பகுதியில் இரவு பகலாக ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அதிகளவு மண்ணைக் கொட்டி மேடுபடுத்தும் பணியை, கேரள அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
கேரள அரசு சூழ்ச்சி
அணையில் 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தும்போது, இந்த ஆனைவச்சால் என்ற இடத்திலும் தண்ணீர் தேங்கும். ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு தடுத்து வந்த கேரள அரசு, மீண்டும் தனது வேலையை ஆரம்பித்துள்ளதாக, தமிழக விவசாயிகள் கூறுகின்றனர்.
பொதுப்பணித்துறை அலுவலகம்
இந்த இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டால், தமிழகத்துக்குச் செல்லும் சுரங்கப் பகுதியில் உடைப்பு ஏற்படுவதோடு, பொதுப்பணித் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தேங்கும்.
தமிழர்கள் போராட்டம்
மேலும், வாகன நிறுத்துமிடத்தை காரணம் காட்டி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த விடாமல் தடுக்கும் முயற்சியிலும் கேரள அரசு மறைமுகமாக ஈடுபடுவதாகக் கூறி, அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழங்குடியின மக்கள் எதிர்ப்பு
இதனிடையே வாகன நிறுத்துமிடம் அமைக்க அங்குள்ள பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கேரளா பேச்சுவார்த்தை
இந்நிலையில், இது தொடர்பான பேச்சுவார்த்தை பெரியார் புலிகள் காப்பக இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. பெரியார் புலிகள் காப்பக வனத்துறை உதவி இயக்குநர் ஜான் மாத்யூ தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், பழங்குடியின மக்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை ஏற்பு
இதில், தாங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் 30 அடி நீள பாதையை ஆக்கிரமிக்கக் கூடாது என்ற பழங்குடியின மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இதனையடுத்து, வாகன நிறுத்துமிடத்திற்கான பணிகள் இன்று முதல் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications