மோடி பதவி விலக வேண்டும்.. கேரளாவில் 70 வயது முதியவர் நூதனப் போராட்டம் !
பிரதமர் நரேந்திர மோடி பதவி விலககோரி முதியவர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகும் வரை பாதி முடிதான் வைத்துக்கொள்ளப்போவதாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதாக கூறி, பழை 500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென கடந்த 8ந் தேதி அறிவித்தார். இந்த ஒற்றை அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பியது. டிசம்பர் 30 -ம் தேதி வரை பழைய நோட்டுக்களை வங்கி தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு புறம் ஆதரவும், மற்றொரு புறம் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பல இடங்களில் ஏடிஎம்களும் திறக்கப்படாமல் உள்ளன. மேலும் வங்கிகளிலும் பணம் மாற்ற முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பதவி விலகக்கோரி கேரளாவில் முதியவர் ஒருவர் நூதன முறையில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கேரளா பல்கலைகழகத்தின் பேராசிரியர் அஷ்ரஃப் கடக்கால், என்பவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது: கேரளாவில் துரித உணவகம் நடத்தும் 70 வயது முதியவர் யாஹியா. மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு தன்னிடம் இருந்த 23 ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்காக வங்கிக்குச் சென்றதாகவும், வங்கியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் நீரிழிவு நோயாளியான அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய யாஹியா தனது தலைமுடியில் இருந்து பாதி முடியை எடுத்துள்ளார். பிரதமர் மோடி ஆட்சியில் இருந்து விலகும்வரை இதுதொடரும் என அவர் சபதம் எடுத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ள அவர், யாஹியா தினமும் செய்தித்தாள் வாசிப்பவர் என்றும் எப்போதும் நைட்டி அணிந்துதான் வேலை செய்வார் எனவும் அந்த பதிவில் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications