30 அடி குழிக்குள் விழுந்த விமானம்...விமான ஓட்டி உயிரிழப்பு...191 பேர் கதியென்ன?
கோழிக்கோடு: துபாயில் இருந்து கேரளாவில் இருக்கும் கோழிக்கோடு கரிபூர் சர்வதேச விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது, 30 அடி குழிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் பலர் காயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான ஓட்டி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அருகில் மலப்புரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மங்களூரில் இருப்பதைப் போன்ற டேபிள்டாப் விமான நிலையம். தரையிறங்கும்போது ஓடுபாதையில் வழுக்கி 30 அடி குழிக்குள் விழுந்தது. விபத்தில் விமான ஓட்டி உயிர் இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.
விமானத்தில் 191 பயணிகள் பயணம் செய்துள்ளனர். காயம் டைண்டஹ்வைர்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு இருப்பதாக எம்.எல்.ஏ. டிவி இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக விமானம் தீ பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். ஆனால் விமானம் இரண்டாக உடைந்துள்ளது.
Recommended Video
விமானம் தையிரங்கும்போது பயங்கரமான மழை பெய்து வந்துள்ளதால், நிதானம் தவறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
#UPDATE Teams of National Disaster Response Force (NDRF) are being rushed to Karipur Airport where the Dubai-Kozhikode flight skidded off the runway, for search & rescue: NDRF Director General SN Pradhan https://t.co/XbEAw2GA4o
— ANI (@ANI) August 7, 2020












Click it and Unblock the Notifications