கேரளா: மொட்டை மாடியில் தவித்த 2 வயது குழந்தை.. ரிஸ்க் எடுத்த காப்பாற்றிய விமான படை வீரர்- வீடியோ
கேரளாவில் மாநிலம் ஆழப்புலாவில் வெள்ளத்தில் சிக்கி இருந்த இரண்டு வயது குழந்தையை ராணுவ வீரர் மீட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் மாநிலம் ஆழப்புலாவில் வெள்ளத்தில் சிக்கி இருந்த இரண்டு வயது குழந்தையை விமான படை ராணுவ வீரர் மீட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
|
ஆழப்புலா வெள்ளம்
கேரளாவில் எல்லா மாவட்டங்கள் போலவும் ஆழப்புலாவிலும் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எல்லா வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றுள்ளது. முக்கியமாக கடலுக்கு அருகில் உள்ள பகுதி என்பதால் அதிக அளவில் இங்கு வெள்ள பாதிப்பது ஏற்பட்டுள்ளது.

4 நாட்களாக உணவில்லை
அதே பகுதியில், வீடு ஒன்றில் கடந்த ஒருவாரமாக 2 வயது குழந்தையும் அவரின் தாயும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். வீட்டிற்குள் வெள்ளம் வந்த காரணத்தால் வீட்டு மொட்டை மாடியிலேயே இரண்டு நாட்களாக தூங்கி இருக்கிறார்கள். அங்கம் பக்கத்து வீட்டிலும் இதே நிலைமை நடந்துள்ளது.

ராணுவ உதவி
இந்த நிலையில்தான் அவர்கள் சில மணி நேரத்திற்கு முன் ராணுவ வீரர்கள் மூலம் காப்பற்றப்பட்டார்கள். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அந்த வீட்டின் மொட்டை மாடியில் இறங்கிய வீரர்கள் முதலில் அந்த வீட்டில் இருந்த குழந்தையின் அம்மாவை காப்பாற்றினார்கள். அதன்பின் அந்த குழந்தையை காப்பாற்றினார்கள். பின் அதே பகுதியில் சிக்கி இருந்த மக்களை காப்பாற்றினார்கள்.

கண்கலங்க வைக்கும் வீடியோ
இதில், அந்த குழந்தை காப்பாற்றப்பட்ட வீடியோ மட்டும் வெளியாகி உள்ளது. குழந்தையை கயிற்றில் இறங்கி அந்த வீரர் காப்பாற்றி இருக்கிறார். குழந்தையை வாங்கியவுடன் குழந்தையின் தாய் சந்தோசத்தில், அந்த வீரருக்கு நன்றி சொல்லியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications