நாட்டிலேயே முதல் முறையாக முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா.. கேரள அரசு அசத்தல்

கேரளாவில் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களுக்கு வரும் 26-ம் தேதி கேரள அரசு நன்றி தெரிவிக்கும் விழா நடத்துகிறது.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களுக்கு வரும் 26-ம் தேதி கேரள அரசு நாட்டிலேயே முதல்முறையாக நன்றி தெரிவிக்கும் விழா நடத்துகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை சந்தித்தது.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 400 பேர் வரை மரணமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

உயிரை பணயம் வைத்து

உயிரை பணயம் வைத்து

பெரும் வெள்ளப்பெருக்கால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாயினர். உணவு உடைமைகளை இழந்து தவித்த அவர்களை முப்படையினரும் தங்களின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர்.

இரவு பகல் பாராமல்

இரவு பகல் பாராமல்

சாலைகள் சேதமடைந்த நிலையில் பல இடங்களில் நடந்தே சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளையும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினர். இரவு பகல் பாராமல் ஹெலிகாப்டர்களிலும் படகுகளிலும் சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

மொட்டை மாடியில் Thanks

மொட்டை மாடியில் Thanks

கனமழை, மோசமான வானிலை, பெரும் வெள்ளப்பெருக்கு என எதையும் சிந்திக்காமல் மக்கள் பணியில் ஈடுபட்ட வீரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கேரளாவில் வீட்டின் மாடியில் Thanks என்று எழுதி நன்றியை வெளிப்படுத்தினர் மக்கள்.

முதல் முறையாக விழா

முதல் முறையாக விழா

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மீட்பு பணிகளை மேற்கொண்ட முப்படையினருக்கு வரும் 26ஆம் தேதி கேரள அரசு நன்றி தெரிவிக்கும் விழா நடத்துகிறது. இதுபோல் எந்த மாநிலத்திலும் நன்றி தெரிவித்து விழா நடத்தப்பட்டதில்லை.

மீண்டும் ஒரு புதுமை

மீண்டும் ஒரு புதுமை

முதல் முறையாக பினராயி விஜயனின் அரசு இதனை செய்கிறது. அந்த வகையில் கேரளா மீண்டும் ஒரு புதுமையை படைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+