பக்ரீத் பண்டிகை.. கேரளாவில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு.. சபரிமலை பக்தர்களுக்கும் செம குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று இரண்டாம் அலை கீழ்நோக்கி பயணித்து வருகிறது. ஆனால் 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 'கொரோனாவின் தேசம்' என்று அழைக்கப்படும் அளவுக்கு அங்கு தினமும் 12,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கூட கேரளாவில் 16,148 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தேசம்

கொரோனா தேசம்

114 பேர் உயிரிழந்துள்ளனர். 1,24,779 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10.76 சதவீதமாக இருக்கிறது. கொரோனா தொடர்ந்து திணறடித்து வருவதால் கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வார இறுதியின் 2 நாட்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை வருவதால் ஜூலை 20-ம் தேதி வரை ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது கேரள அரசு.

தளர்வுகள் அறிவிப்பு

தளர்வுகள் அறிவிப்பு

கொரோனா பாசிட்டிவ் விகிதத்தை(டிபி ஆர்) வைத்து பல்வேறு பிரிவுகளாக கட்டுப்பாடுகளை ஏற்கனவே அறிவித்துள்ளது கேரளா. அதாவது 5% க்குக் கீழே உள்ள டி.பி.ஆர் உள்ள பகுதிகள் ஏ எனவும், 5 முதல் 10% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் பி எனவும், 10 முதல் 15% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் சி எனவும், 15% மேல் டிபிஆர் கொண்ட பகுதிகள் டி எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. டி.பி.ஆர் விகிதத்தை வைத்து கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அளிக்கப்படுகின்றன.

வழிபாட்டு தலம்

வழிபாட்டு தலம்

* ஏ, பி மற்றும் சி பிரிவில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளைத் தவிர ஆடைகள், காலணிகள், மின்னணு பொருட்கள், நகைகளை விற்கும் கடைகள் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும்

* வழிபாட்டுத் தலங்களில், குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்ற 40 பேர் வரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

* டி' பிரிவில் உள்ள கடைகள் திங்கள்கிழமை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும்

* ஏ' மற்றும் 'பி' பிரிவுகளில், குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்ற ஊழியர்களுடன் அழகு நிலையங்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன

சபரிமலையில் எத்தனை பக்தர்கள்?

சபரிமலையில் எத்தனை பக்தர்கள்?

* ஏ மற்றும் பி பிரிவில் திரைப்பட படப்பிடிப்பையும் நடத்திக் கொள்ளலாம். ஆனால் கடுமையான கொரோனா நெறிமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

* சபரிமலை கோவிலில் தினமும் 5,000 முதல் 10,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கும், தேர்வு எழுதவும் ஆர்டி-பி.சி.ஆர் கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் தேவையில்லை.

* ஆனால் இவர்கள் இரண்டு அளவு தடுப்பூசி பெற்றதாகக் காட்டும் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+