வீரமரணமடைந்த கேரள வீரர் நிரஞ்சன் மீது அவதூறு- தேசத்துரோக வழக்கில் இளைஞர் கைது
திருவனந்தபுரம்: பஞ்சாப் தாக்குதலில் வீரமரணமடைந்த கேரள வீரரை இழிவுபடுத்திய இளைஞர் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவனின் உடலில் கட்டப்பட்டு இருந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் போது குண்டு வெடித்ததில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன்குமார் வீரமரணம் அடைந்தார்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ராதிகா பெங்களூரில் டாக்டராக பணிபுருகிறார். இந்த தம்பதிக்கு 2 வயதில் விஸ்மயா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீரமரணம் அடைந்த நிரஞ்சன்குமாரின் உடல் பெங்களூரில் நேற்று இறுதி அஞ்சலி முடிந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் பாலக்காட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் இன்று காலை உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த அன்வர் என்ற இளைஞர் ஒருவர் அவரை இழிவுபடுத்தும் விதமாக ஒரு தொல்லை ஒழிந்தது என்றும், அவரது மனைவிக்கு உதவியும் வேலையும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். கடும் சர்ச்சையை ஏற்படுத்திய இவரது கருத்தால் கேரள போலீசார் அன்வரை தேசத்துரோக வழக்கில் கைது செய்தனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications