டிவி விவாதத்தின் போது மோதல்.. கல்வீச்சில் கேரளா அமைச்சர் காயம்
கொல்லம்: கேரளாவில் டிவி விவாதத்தின் போது ஏற்பட்ட மோதலில் அமைச்சர் மற்றும் வேட்பாளர் ஆகியோர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் மே 16 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கேரளாவில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப் பதிவுக்கு 2 வாரங்கள் உள்ள நிலையில், பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது. இதையொட்டி வேட்பளர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிக்கு டிவி சேனல் ஏற்பாடு செய்திருந்தது.
பொது மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விவாத நிகழ்ச்சியில் கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிபு பேபி ஜான் மற்றும் எதிர்கட்சி வேட்பாளரான இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்த விஜயன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது விவாதத்தின் போது வாக்குவாதம் முற்றி மோதல் வெடித்தது. இதையடுத்து ஒரு தரப்பினர் டிவி சேனல் மீது கல் வீசி தாக்கினர். இந்த தாக்குதலின் போது ஒரு கல் பட்டு சிபு பேபி ஜான் கையில் காயம் ஏற்பட்டது. அதேபோல விஜயன் பிள்ளை மீது ஒரு நாற்காலி விழுந்ததில் அவரும் காயம் அடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவம் சவரா தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மோதல் தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொண்டர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிபு பேபி ஜான் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் சவரா தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு சிபு பாபு ஜான் வெற்றி பெற்றுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications