சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம்: கேரள அமைச்சர் சுரேந்திரன்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளது என கேரள அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அணைவரையும் அனுமதிக்க கேரளா தேவசம் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளதாக கேரளா அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்திரன் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது சிறுமிகளுக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுவருகிறது. சபரிமலை கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. இது தொடர்பாக விவாதங்களும் சர்ச்சைகளும் நடந்துவந்தன.

இந்நிலையில், சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இந்திய இளைஞர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி தீபக் மிஸ்ரா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் அனைவருக்கும் கோயிலில் வழிபட உரிமை உள்ளது என்றும் கூறினார்.
இதைத்தொடர்து, இந்த வழக்கு தொடர்பாக கேரள அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு என உச்ச நீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளோம்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். சபரிமலை கோயிலில் எல்லா வயது பெண்களை அனுமதிக்கும் அரசின் நிலைப்பாட்டுக்கு கேரள தேவசம் போர்டு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications