ஆத்தா மகாவாராகி தாயே! அரிகொம்பன் யானைக்கு ஒன்னும் ஆகப்படாது.. திருச்சூரில் விடிய விடிய பூஜை!
திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூர் கோவிலில், அரிகொம்பன் எனும் அரிசி கொம்பன் யானை நீண்டகாலம் வாழ 2 நாட்கள் இடைவிடாமல் பூஜை செய்து பிரார்த்தித்துள்ளார் மலேசியா வாழ் இந்திய பெண்.
கேரளாவில் அரிகொம்பன்.. தமிழ்நாட்டில் அரிசி கொம்பன் எனும் ஒற்றை யானை.. இத்தனைக்கும் 10 பேரை பலி கொண்ட மூர்க்கமான யானை. ஆனாலும் இரு மாநில மக்களும் அரிகொம்பன் எனும் அரிசிகொம்பனிடம் காட்டும் நேசம் தொடருகிறது.

கேரளா வனப்பகுதிகளில் மூர்க்கமாக 10 பேரை மிதித்தே கொன்ற அரிகொம்பன் யானை பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அங்கிருந்து தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது அரிகொம்பன் யானை. இதனால் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடும் நிலைமையும் வந்தது. ஒரு வார காலம் தமிழ்நாட்டு எல்லைகளை அதகளப்படுத்திய அரிகொம்பன் மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. பின்னர் களக்காடு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
களக்காடு வனப்பகுதியில் அரிகொம்பன் யானையை கொண்டு வந்துவிடக் கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில் அரிகொம்பன் யானை, கேரளாவின் மூணாறு சின்னக்கானல் வனப்பகுதியில் பிறந்தது; ஆகையால் அங்கேயே கொண்டு வந்துவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அரிகொம்பனுக்காக அதன் சகா சக்க கொம்பன் யானை, கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று மறியல் போராட்டம் போல நடத்திய வீடியோவும் வெளியானது.
இந்த நிலையில் அரிகொம்பன் யானை தமிழ்நாட்டின் களக்காடு வனத்துறையில் நடமாடி வருவது தொடர்பான வீடியோக்களை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டு வருகிறது. 10 பேரை கொன்ற மூர்க்கத்தனம் இல்லாமல் பரம சாதுவாக, புற்களை பிடுங்கி ஓடை நீரில் அலசி சாப்பிடும் காட்சிகள் அரிகொம்பன் மீதான கோபத்தைக் குறைத்தது. இதனைத் தொடர்ந்து ஒரு பச்சிளம் குழந்தை போல தரையில் கவலையின்றி அரிகொம்பன் யானை உறங்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் நேற்று முதல் பகிரப்பட்டு வருகிறது. இப்போது தமிழ்நாடு, கேரளா மாநில மக்களின் கவனத்துக்குரிய நேச யானையாகிவிட்டார் அரிகொம்பன்.

இதனிடையே கேரளாவின் திருச்சூர் அருகே வல்லூர் கிராமத்தில் மகா வாராகி அம்மன் கோவிலில் மலேசியாவை சேர்ந்த கொச்சுரானி என்ற பெண் 2 நாட்களாக அரிகொம்பன் யானைக்காக பூஜைகள் நடத்தி உள்ளார். மகாவாராகி அம்மன் கோவிலில் விடிய விடிய நடந்த இந்த பூஜையே, அரிகொம்பன் யானை நோய் நொடியில்லாமல் எந்த தீங்கும் யாருக்கும் ஏற்படுத்தாமல் நீண்டகாலம் வாழ வேண்டும் என்பதற்காகாத்தானாம். அத்துடன் வரும் 23-ந் தேதியன்று அரிகொம்பனுக்காக பஞ்சமி பூஜையும் நடைபெற உள்ளதாம். இப்பூஜைகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அரிகொம்பன் யானைக்காக பிரார்த்தனை செய்தனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications