4 வருடங்களாக தொடர்ந்து பலாத்காரம்.. கத்தோலிக்க பேராயர் மீது கேரள கன்னியாஸ்திரி பரபரப்பு புகார்
Recommended Video

திருவனந்தபுரம்: கத்தோலிக்க பேராயர் மீது கன்னியாஸ்திரி பாலியல் புகார் சுமத்தியுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோமன் கத்தோலிக் ஜலந்தர் மறைமாவட்ட பேராயராக உள்ளவர் பிராங்கோ முலக்கல் (54). இந்த மறைமாவட்ட நிர்வாகத்திற்கு கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள குரவிலாங்காட்டில் கான்வென்ட் ஒன்று உள்ளது. இதை மூத்த கன்னியாஸ்திரி ஒருவர் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், பேராயர் பிராங்கோ முலக்கல் தன்னை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கோட்டயம் மாவட்ட போலீசில் புகார் அளித்துள்ளார்.
கன்னியாஸ்திரி புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாஸ்திரி தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

4 வருடங்கள் முன்பு
2014ம் ஆண்டு பேராயர் பிராங்கோ முலக்கல் என்னை, கோட்டயம் மாவட்டம் குரவில்லங்காடு பகுதியிலுள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் வைத்து பலாத்காரம் செய்தார். இதன்பிறகு என்னை பல்வேறு சந்தர்ப்பங்களில் 13 முறை மிரட்டி பலாத்காரம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்.

பேராயரும் புகார்
பேராயரின் செயல்பாடு பற்றி ஏற்கனவே கார்டினலிடம் கன்னியாஸ்திரி புகார் அளித்ததாகவும், ஆனால், அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை என்பதால் போலீஸ் துணையை கன்னியாஸ்திரி நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே பேராயர் பிராங்கோ முலக்கலும், கன்னியாஸ்திரி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக, போலீசில் புகார் அளித்துள்ளார்.

பழிவாங்குவதாக குற்றச்சாட்டு
போலீசில் பேராயர் பிராங்கோ முலக்கல் அளித்துள்ள புகாரில், கன்னியாஸ்திரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாகவும், பணியிடமாற்றம் செய்ததாகவும், அதனால் அவர் தன் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கோட்டயம் போலீஸ் எஸ்.பி. ஹரிசங்கரிடம் கேட்டபோது, "பேராயரிடமிருந்து முதலில் புகார் வந்தது. இதன்பிறகு கன்னியாஸ்திரியிடமிருந்து புகார் பெறப்பட்டது. இரு புகார்களையும் விசாரித்து வருகிறோம்" என்றார். பேராயர் புகார் அளித்த 2 நாட்கள் பிறகு கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். கன்னியாஸ்திரி புகார் அளிக்கப்போவதாக கூறியதும் பேராயர் தரப்பு முந்தியதாக கன்னியாஸ்திரி தரப்பு குற்றம்சாட்டுகிறது.

கேரளாவில் தொடரும் பரபரப்பு
இதுகுறித்து கன்னியாஸ்திரி கூறுகையில், இதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. பேராயருக்கு எதிராக சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க எனது முயற்சிகளை தொடருவேன் என்றார். கேரளாவில், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை கட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற 2 குழந்தைகளின் தாயாரை பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்த புகார், சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேராயருக்கு எதிராக கன்னியாஸ்திரியே புகார் அளித்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பாதிரியார்கள் தொடர்பான பாலியல் புகார்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதை புள்ளி விவரங்கள் எடுத்துக்கூறுகின்றன. ஆனால் தேவாலய நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விஷயம் சமாதானப்படுத்தப்படுவதாக இதுதொடர்பான ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications