ஆமா.. என்னை ஏன் நீங்க முதலிலேயே கைது பண்ணல?.. அதிர வைத்த ஜோலி.. ஆடிப் போன போலீஸ்!
ஜோலியிடம் கேரள போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்
Recommended Video
கோழிக்கோடு: "ஆமா.. என்னை ஏன் நீங்க முதலிலேயே கைது பண்ணல? அப்படி நீங்க கைது பண்ணி இருந்தீங்கன்னா.. இவ்ளோ கொலைகள் நடந்திருக்காது இல்லை?" என்று போலீசாரிடம் கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்துள்ளார் ஜோலி!
சொத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு வைத்து கொன்றார் ஜோலி என்ற 47 வயது பெண். 17 வருடங்களுக்கு முன்பு இந்த கொலைகளை செய்த ஜோலி இப்போது கைதாகி உள்ளார்.
சொத்துக்காக கொலை என்றாலும், பெண்களை கண்டாலும் ஜோலிக்கு பிடிக்காதாம். அதனால் கொலை செய்த 6 பேரில் 3 பேர் மாமியார் உட்பட பெண்களாக இருந்திருக்கிறார்கள். இவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சோதனை
இதுபோக, ஜோலியின் வீட்டில் போலீசார் சோதனையும் நடத்தி வருகின்றனர். 2 காலி பாட்டில்களைகைப்பற்றி உள்ளனர். அது என்ன பாட்டில் என்று இன்னும் தெரியவில்லை. இதுபோக 47 மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காலியாக ஒரு டப்பா இருந்திருக்கிறது.

லேப்-டெஸ்ட்
அந்த டப்பாவில்தான் சயனைடை வாங்கி வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்னொரு பாட்டிலில் பிரவுன் கலரில் ஒரு பவுடர் இருக்கிறது. அதனால், இவைகளை லேப்-பில் டெஸ்ட்டுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இப்படி வீடு முழுக்க விஷம், விஷமாய் டப்பாக்களில் அடைத்து வைத்திருந்ததை பார்த்தால், இதே பொழப்பாகத்தான் ஜோலி இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

வக்கீல்கள்
நடந்திருக்கும் 6 கொலைகளை தவிர வேறு சில மரணங்களிலும் ஜோலிக்கு கண்டிப்பாக தொடர்பு இருக்கும் என்கிறார்கள். 17 வருட இடைவெளியில் 6 கொலைகளை செய்த ஜோலி கோர்ட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம் மக்கள் திரண்டு எதிர்ப்புகளை காட்டுகிறார்கள். ஜோலிக்காக வாதாட வக்கீல்களும் முன்வராமல் தயங்கினர். ஆளூர் என்பவர் மட்டும் ஜோலி தரப்பில் வாதாட முன் வந்திருக்கிறார்.

ஜோசப்
இதையெல்லாம் பார்த்து அதிகமாக நொந்து பாதிக்கப்பட்டுள்ளார் ஜோலியின் தந்தை ஜோசப். "இப்படி ஒரு அவமானத்தை எங்களுக்கு தேடி தந்துவிட்டாளே.. அவளை முழுசா நாங்க நம்பினோமே.. இப்படி ஏமாத்திட்டாளே.. அவளுக்கு பண கஷ்டம்ன்னு சொன்னாள், அதனால, அவளுடைய மூத்த மகன் படிப்பு செலவை கூட நாங்கதான் பார்த்துக்கிட்டோம்.. எங்களை இப்படி ஏமாத்திட்டாளே" என்று புலம்புகிறார்.

அப்பாவி புருஷன்
இதனிடையே விசாரணையில், கணவன் ராய் தாமசுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதை போலவே 2-வது கணவரையும் கொள்ள பிளான் போட்டுள்ளார் ஜோலி. "நிறைய ஆண்களுடன் தொடர்பு, ஏகப்பட்ட அபார்ஷன்கள் நடந்துள்ளதே என்று 2-வது கணவரிடம் போலீசார் கேட்டதற்கு, அப்படியெல்லலாம் இல்லையே என்று சொல்லி உள்ளார் இந்த அப்பாவி 2-வது புருஷன்!

அதிர வைத்த ஜோலி
இது எல்லாவற்றையும்விட ஹைலைட் என்னவென்றால், "என்னை ஏன் நீங்க முதலிலேயே கைது செய்யவில்லை. அப்படி நீங்க என்னை கைது பண்ணியிருந்தீங்கன்னா.. இவ்ளோ கொலைகள் நடந்திருக்காது இல்லை?" என்ற கேள்வியையும் ஜோலி எழுப்பியதை கண்டு ஷாக் ஆகி உள்ளனர் கேரள போலீசார்!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications