கேரளா: இன்னொரு அபயா? கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்பு- போலீஸ் தீவிர விசாரணை
கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் சர்ச் கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளா கான்வென்ட்டுகளில் கன்னியாஸ்திரிகள் தொடர்பான சம்பவங்கள் பெரும் பரபரப்பை கிளப்பிவிடுகின்றன. 28 ஆண்டுகளுக்கு முன்னதாக கோட்டயம் கன்னியாஸ்திரி அபயா மர்ம மரண வழக்கு நாட்டையே உலுக்கியது.
கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி அபயா, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக 2 சிபிஐ குழுக்கள் விசாரணை நடத்தியும் அபயா மர்ம மரணத்தின் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை.

அபயா கொலை
3-வது சிபிஐ குழு நடத்திய விசாரணையில்தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலத்துக்கு வந்தன. கன்னியாஸ்திரி செபி என்பவருடன் 2 பாதிரியார்கள் தகாத உறவு வைத்திருந்ததை அபயா பார்த்ததால் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவருக்கு ஆயுள் தண்டனை
28 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. கன்னியாஸ்திரி செபி, பாதிரியார் கோட்டூர் தாமஸ் ஆகியோருக்கு அபயா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த பரபரப்புகள் ஓய்ந்து சில மாதங்களுக்குள் கொல்லம் கான்வென்ட் கிணறில் மற்றொரு கன்னியாஸ்திரி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொல்லம் கன்னியாஸ்திரி
கொல்லம் கான்வென்ட்டில் தங்கி இருந்த பவும்பாவை சேர்ந்த மேப்லி ஜோசப் என்ற கன்னியாஸ்திரி காலையில் பிரார்த்தனைக்கு வரவில்லை. இதனையடுத்து அவர் தேடப்பட்டதாகவும் அப்போது கிணற்றில் சடலமாக மிதந்த நிலையில் அவரது உடல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கன்னியாஸ்திரி தற்கொலையா?
தற்போது கன்னியாஸ்திரியின் உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கிலும் இது தற்கொலையாக இருக்கலாம் என்றே இப்போது கூறப்படுகிறது. இருப்பினும் போலீஸ் விசாரணையில்தான் உண்மை என்னவென்று தெரியவரும். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications