கேரளாவில் காங். அணிக்கு 11 முதல் 17 இடங்கள்; இடதுசாரிகளுக்கு 4-8; ராகுலுக்கு அமோக ஆதரவு!
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தலில் கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 11 முதல் 17 தொகுதிகளைக் கைப்பற்றுமாம். இடதுசாரிகள் அணிக்கு 4 முதல் 8 தொகுதிகள்தான் கிடைக்குமாம். இம்மாநிலத்தில் நாட்டின் பிரதமராக ராகுல் காந்திதான் வர வேண்டும் என்று 24% பேர் கூறியுள்ளனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பல மாநில நிலவரங்களை சி.என்.என். ஐபிஎன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் அதிமுக, கர்நாடகாவில் காங்கிரஸ், ஆந்திராவில் தெலுங்குதேசம் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

காங்கிரஸ் அணி
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 11 முதல் 17 தொகுதிகளைக் கைப்பற்றுமாம். இந்த அணிக்கு 45% வாக்குகள் கிடைக்குமாம்..

இடது முன்னணி
கேரளாவில் இடதுசாரிகள் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு 4 முதல் 8 தொகுதிகள்தான் கிடைக்குமாம். மொத்தம் 36% வாக்குகள் இடது முன்னணிக்கு கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு.

பிரதேச வாரியாக..
கேரளாவின் மலபார் பகுதியில் காங்கிரஸ், இடது அணிகளுக்கு இடையே கடும் போட்டி; கொச்சின் பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னணி, திருவாங்கூர் பிரதேசத்தில் இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறதாம்.

காங்.கை ஆதரிக்கும் சிறுபான்மையினர்..
காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்களில் 59% பேரும் கிறித்துவர்களில் 68% பேரும் ஆதரவு தெரிவிக்கின்றராம். ஹிந்துக்களில் 44% பேர் இடது முன்னணியை ஆதரிக்கிறார்களாம்.

ராகுலுக்கு ஆதரவு
நாட்டின் பிரதமராக ராகுல் காந்திதான் வர வேண்டும் என்று கேரளாவில் 24% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் மோடிக்கு 12% பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இங்கு முதன்மை பிரச்சனையாக விலைவாசி உயர்வுதான் இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications